அரியலூரில் ஜூலை 30 மாநில இளைஞரணி மாநாடு: திரளாகப் பங்கேற்க முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 3, 2022

அரியலூரில் ஜூலை 30 மாநில இளைஞரணி மாநாடு: திரளாகப் பங்கேற்க முடிவு

 கடலூர் இளைஞரணி கலந்துரையாடலில் தீர்மானம்

கடலூர், ஜூன் 3 கடலூர் மண்டல திராவிடர் கழக இளை ஞரணி கலந்துரையாடல் கூட்டம்  வடக்குத்து அண்ணா கிராமம் பெரியார் படிப்பகத்தில் 24.5.2022 அன்று நடை பெற்றது.

கூட்டத்தில் கடலூர் மண்டல இளைஞரணி செயலாளர் நா. பஞ்சமூர்த்தி வரவேற்புரையாற்றினார் கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் தலைமை வகித்தார் அப்போது ஜூலை 30 ஆம் தேதி அரியலூரில் நடைபெறும் மாநில மாநாட்டின் முக்கியத்துவம் குறித்து விரிவாகப் பேசினார். மாநாட்டில் நடைபெறும் சீருடை அணிவகுப்பில் கடலூர் மண்டலத்தில் இருந்து 300 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்க வேண்டும் என தெரிவித்தார்.

கடலூர் மண்டலத் தலைவர் அரங்க.பன்னீர்செல்வம், மண்டலச் செயலாளர் நா.தாமோதரன், கடலூர் மாவட்டத் தலைவர் சொ.தண்டபாணி, விருத்தாசலம் மாவட்டத் தலை வர் அ.இளங்கோவன் மாவட்டச் செயலாளர் ப.வெற்றிச் செல்வன், கடலூர் மாவட்ட அமைப்பாளர் சி.மணிவேல், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தா.தம்பி பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதனையடுத்து மாநில இளைஞரணி செயலாளர் 

த.சீ. இளந்திரையன், கடலூர் மாவட்ட இளைஞரணி தலைவர் நா.உதயசங்கர், கடலூர் மாவட்ட இளைஞரணிச் செயலாளர் கோ.வேலு, கடலூர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் டிஜிட்டல் இராமநாதன், விருதாச்சலம் மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் மு.முகமது பஷீர், சிதம்பரம் மாவட்ட இளைஞரணி தலைவர் அ.சுரேஷ், சிதம்பரம் மாவட்ட இளைஞரணிச் செயலாளர் சிற்பி சிலம்பரசன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள்:

தீர்மானம் 1: 

மாநில இளைஞரணி கலந்துரையாடல் கூட்ட தீர்மானங்கள் 

30.04.2022 அன்று சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழக மாநில இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்று செயல்படுத்துவது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் 2: 

தமிழர் தலைவர் ஆசிரியருக்கு வாழ்த்து - நன்றி

எதிர்கால இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு ஏப்ரல் 3 முதல் 25 வரை நாகர்கோவில் முதல் சென்னை வரை 21 நாட்கள் நீட் தேர்வு எதிர்ப்பு, தேசிய புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு உள்ளிட்ட முழக் கங்களை முன்னிறுத்தி கோடை வெப்பம்- உடல் நிலையை யும் பொருட்படுத்தாமல் பரப்புரைப் பயணம் மேற்கொண்டு மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்திய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு காரைக்கால் மண்டல திராவிடர் கழக இளைஞரணி சார்பில் வாழ்த்துகளையும், நன்றியையும் இக்கூட்டம் தெரிவித்துக்கொள்கிறது.

தீர்மானம் 3: 

திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாடு

2022 ஜூலை 30 அன்று அரியலூரில் நடைபெறும் திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட்டில் காரைக்கால் மண்டலத்திலிருந்து நூற்றுக்குமேற்பட்ட இளைஞர்கள் தனி வாகனத்தில் சென்று, அம்மாநாட்டில் நடைபெறும் சீருடை அணிவகுப்பில் பங்கேற்பது எனவும், இம்மாநில மாநாட்டை விளக்கி மண்டலம் முழுவதும் சுவரெழுத்துப் பிரச்சாரம் செய் வது மற்றும் தெருமுனை கூட்டங்களை நடத்துவது எனவும் பெரியார் சமூகக் காப்பு அணி பயிற்சிக்கு 5 இளைஞர்களை அனுப்புவது எனவும் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 4: 

குற்றாலம் பெரியாரியல் பயிற்சி வகுப்பு

2022 ஜூன் 8,9,10,11 ஆகிய தேதியில் குற்றாலத்தில் நடைபெறும் பெரியாரியல் பயிற்சி வகுப்பில் காரைக்கால் மண்டலத்திலிருந்து அதிகப்படியான இளைஞர்களை பங்கேற்க செய்வது என முடிவு செய்யப்படுகிறது. 

தீர்மானம் 5: 

60,000 'விடுதலை' சந்தா

உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடான விடுதலை நாளி தழுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆசிரியராக பொறுப்பேற்று 60 ஆம் ஆண்டு தொடங்க வுள்ளது. 60 ஆண்டுகளாக அயராது பணியாற்றிவரும் தமிழர் தலைவர் அவர்களை ஊக்கப்படுத்திடவும், இனவுரிமை மீட்பு போரில் வாளாக போரிடும் விடுதலைக்கு 60,000 சந்தா சேர்ப்பு இயக்கத்தில் கழக இளைஞரணி பொறுப்பாளர்கள், தோழர்கள் மண்டல கழக பொறுப்பாளர்களோடு இணைந்து பணியாற்றி இலக்கை எட்டுவது என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 6: 

கிராமப் பிரச்சாரம்

காரைக்கால் மண்டலத்தில் கொம்யூன்கள் தோறும் கிளைக்கழக வாரியாக கலந்துரையாடல் கூட்டங்களை நடத்தி, இளைஞரணி அமைப்பை புதுப்பிப்பது எனவும், இளைஞர்களை  இயக்கத்தின்பால் ஈர்க்கும் வகையில் ஒவ்வொரு கிளைக் கழகத்திலும் கிராமப் பிரச்சார கூட்டங் களை நடத்துவது எனவும் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 7: 

பகுத்தறிவாளர் கழக மாநாடு

செஞ்சியில் ஜூன் 19 அன்று நடைபெறும் பகுத்தறிவாளர் கழக பொன்விழா ஆண்டு நிறைவு விழா மாநாட்டில் திரளாகப் பங்கேற்பது என முடிவு செய்யப்படுகிறது.

நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கந்தசாமி, எனதிரிமங்கலம் ராஜேந்திரன், நூலகர் கண்ணன், கனகராஜ்,  கழக சொற்பொழிவாளர் புலவர் ராவணன், அப்பியம்பேட்டை செந்தில்வேல், விருதாச்சலம் ஒன்றியத் தலைவர் கி.பாலமுருகன், திண்டிவனம் மாவட்ட ப.க. செயலாளர் நவா.ஏழுமலை,  திண்டிவனம் மாவட்ட அமைப்பாளர் வில்லவன் கோதை, திண்டிவனம் நகர தலைவர் பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் நிறைவில் கடலூர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் டிஜிட்டல் ராமநாதன் நன்றி கூறினார். 

No comments:

Post a Comment