விவசாயிகள் சங்கத் தலைவர் திகாயத் மீது தாக்குதல் - கருப்பு மை வீச்சு ‘மோடி-மோடி’ என்று முழக்கமிட்ட வன்முறையாளர்கள்: 3 பேர் கைது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 1, 2022

விவசாயிகள் சங்கத் தலைவர் திகாயத் மீது தாக்குதல் - கருப்பு மை வீச்சு ‘மோடி-மோடி’ என்று முழக்கமிட்ட வன்முறையாளர்கள்: 3 பேர் கைது

 பெங்களூரு, ஜூன் 1- ஒன்றிய பாஜக அரசு விவசாயிகள் எதிர்ப் புகளையும் மீறி வேளாண் சட்டங் களை திணித்தபோது அதனைக் கடுமையாக எதிர்த்த விவசாயிகள் கொதித்தெழுந்து ஓராண்டாகப் போராட்டங்களை முன்னெடுத் தனர். 11 கட்ட பேச்சுவார்த்தை என்கிற பெயரில் விவசாயிகளை ஒடுக்க நினைத்த பாஜக தோல் வியையே கண்டது. 

பின்னர் வேளாண் சட்டங் களைத் திரும்பப் பெறுவதாக ஒன்றிய பாஜக அரசு தெரிவித்தது. ஆனாலும், போராட்டத்தை முன் னெடுத்த விவசாய சங்கமான பார திய கிசான் யூனியன் அமைப்பின் செய்தி தொடர்பாளரான ராகேஷ் திகாயத் மீது பாஜக உள்ளிட்ட சங் பரிவார அமைப்பினர் வஞ்சம் தீர்க்க காத்திருந்துள்ளனர் என்பதை தற்பொழுது அவர்மீதான தாக்குதல் உணர்த்தியுள்ளது.

செய்தியாளர்கள் சந்திப்பில் தாக்குதல்

பெங்களூருவில் விவசாய சங்கத் தினர் உள் அரங்கக் கூட்டம் நடை பெற்றது. மேடையில் பெண் பொறுப்பாளர் உள்ளிட்ட மூத்த பொறுப்பாளர்கள் அமர்ந்திருந் தனர். அப்போது பாரதிய கிசான் யூனியன் அமைப்பின் தலைவரான திகாயத் மீது ஹிந்துத்துவ பாஜக வன்முறையாளர்களால் திட்ட மிட்டு கருப்பு மைவீச்சு, தாக்குதல் நடத்தப்பட்டது.

பெங்களூரு சென்ற ராகேஷ் திகாயத் மீது செய்தியாளர்கள் சந்திப்பின்போது, அவர் மீது மைக்கை எடுத்து சரமாரியாக ஒருவர் தாக்கியுள்ளார். அவரைத்
தொடர்ந்து வந்த மற்றொருவர் அவர்மீது கருப்பு மை வீசி அவரை அவமானப்படுத்தியுள்ளார். அக்காட்சிப்பதிவு சமூக வலை தளங்களில் வெளியாகியுள்ளது. 

செய்தி நிறுவனமான ஏ.என்.அய். செய்தி நிறுவனத்தால் பகிரப் பட்ட 30 வினாடிகள் நீளமான காட்சிப்பதிவில், தாக்குதல், கருப்பு மை வீச்சில் இருவர் ஈடுபடுகின்றனர். தாக்கியவரைத் தடுப்ப தற்குள், மற்றொருவர் மேடையேறி கருப்பு மையை திகாயத்மீது வீசுகின்றார். பார்வை யாளர்கள் வரிசையில் இருந்தவர்கள் பெரிதும் பதற்ற மடைகின்றனர். அந்த அரங்கமே பதற்றத்துக்குள்ளானது. விவ சாயிகள், பொதுமக்கள், செய்தியாளர் கள் அனைவரிடமும் பதற்றம் தொற்றிக் கொண்டது.

திடீர் தாக்குதலில் ஈடுபட்ட வர்கள் ‘மோடி, மோடி’ என்று முழக்கமிட்டபடி, பார்வையாளர் கள் மீதும் நாற்காலிகளைத் தூக்கி எறிகின்றனர். அதனைத் தொடர்ந்து விவசாய சங்கத் தலைவர் மீது கருப்பு மை வீசி தாக்கியவர்களுக்கும், திகாயத் ஆதரவாளர் களுக்கும் இடையே  கைகலப்பு ஏற்பட்டது.

 ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக டில்லியில் விவசாயிகள் நடத்திய போராட் டத்தை முன்னின்று நடத்திய ஒரு முக்கிய விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் ஆவார். பெங்களூ ருவில் செய்தியாளர் கூட்டத்தில் அவர் உரையாற்றிக் கொண்டிருந் தார். அப்போது 12பேருக்கும் மேல் நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்த அரங்கத்தினுள் நுழைந்து வன் செயல்களில் ஈடுபட்டுள்ளனர். கருநாடக மாநில பாஜக அரசின் காவல்துறையினர்  பாதுகாப்பு நடவ டிக்கை ஏதும் எடுக்கவில்லை என்று திகாயத் கூறியுள்ளார். “இங்கு உள்ளூர் காவல்துறையினரால் எந்தப் பாதுகாப்பும் வழங் கப்படவில்லை. இது அரசுடன் கூட்டு  சேர்ந்து செய்யப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார். 

ஏ.என்.அய். செய்தி நிறுவனத்தின் வலைப்பதிவில் இத்தாக்குதல் குறித்த காட்சிப்பதிவு பதிவேற்றப் பட் டுள்ளது. பலராலும் அக்காட் சிப்பதிவு பகிரப்பட்டுள்ளது.  இத் தாக்குதல் தொடர்பாக அம்மாநில காவல்துறையினரால் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சகிப்பின்மையின் மறு பெயர் பாஜக, சங் பரிவாரங்கள் என்றால் மிகையாகாது. அதன் ஆதாரபூர்வ சாட்சியாகவே இந் நிகழ்வும் அமைந்துள்ளது.

No comments:

Post a Comment