சென்னை, ஜூன் 4 சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய கூடுதல் நீதிபதிகளாக வழக்குரைஞர்கள் சுந்தர்மோகன், கே.குமரேஷ் பாபு ஆகியோரை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள காலியிடங் களை நிரப்பும் வகையில், வழக்குரைஞர்களாகப் பணியாற்றிய என்.மாலா, சுந்தர்மோகன், கே.குமரேஷ்பாபு, எஸ்.சவுந்தர், அப்துல் ஹமீத், ஆர்.ஜான்சத்யன் ஆகியோரை நீதிபதிகளாக நியமிக்க, உச்ச நீதிமன்ற கொலீஜியம் ஒன்றிய அரசுக்கு கடந்த பிப்ரவரி மாதம் பரிந்துரை செய்திருந்தது.
முதல்கட்டமாக என்.மாலா, எஸ்.சவுந்தர் ஆகியோர் ஏற்கெனவே நீதிபதிகளாக நியமிக்கப்பட்டு, பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் வழக்குரைஞர்களாகப் பணியாற்றி வரும் சுந்தர்மோகன் மற்றும் கே.குமரேஷ்பாபு ஆகியோரை தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய கூடுதல் நீதிபதிகளாக நியமித்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
இவர்களுக்கு விரைவில் தலைமை நீதிபதி பதவிப்பிரமாணம் செய்துவைப்பார். இதன் மூலம் சென்னைஉயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை 58-ஆக உயர்ந்துள்ளது. மொத்த நீதிபதி பணியிடங்களின் எண்ணிக்கை 75 என்ற நிலையில், காலியிடங்களின் எண்ணிக்கை 17-ஆக உள்ளது.
No comments:
Post a Comment