ஆளுநரை சந்தித்தார் முதலமைச்சர்: 21 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டுகோள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 3, 2022

ஆளுநரை சந்தித்தார் முதலமைச்சர்: 21 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டுகோள்

சென்னை, ஜூன் 3  ஆளுநர் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (2.6.2022) சந்தித்துப் பேசினார் அப்போது, நிலுவையில் உள்ள சித்த மருத்துவ பல்கலைக்கழகம் உள் ளிட்ட 21 சட்ட மசோதாக்களுக்கு விரைவில் ஒப்புதல் வழங்க வேண்டும் என முதலமைச்சர் வலியுறுத்தினார். நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலை வருக்கு அனுப்பியதற்காக நன்றி யும் தெரிவித்துக் கொண்டார்.

இந்நிலையில், கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (2.6.2022) மாலை 5 மணிக்கு சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது, நீர்வளத்துறை அமைச் சர் துரைமுருகன், உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் உடன் இருந்தனர்.

ஆளுநருடனான சந்திப்பு குறித்து அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். அப்போது, நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்ட மசோ தாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்த தற்காக ஆளுநருக்கு முதல மைச்சர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

அத்துடன், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறை வேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப் புதலுக்காக அனுப்பிவைக்கப் பட்டுள்ள சட்ட மசோதாக் களுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். குறிப் பாக, மருத்துவ மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்க உள்ள நிலையில், தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என வலி யுறுத்தினார்.

மேலும், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் திருத்தச்சட்ட மசோதா, தமிழ் நாடு அடுக்குமாடி குடியிருப்பு உரிமை சட்ட மசோதா, தமிழ் நாடு பல்கலைக்கழக சட்ட மசோதா உள்ளிட்ட 21 மசோதாக்களுக்கு விரைவாக ஒப்புதல் அளித்து, அரசியல் சாசனத்தின் உணர்வையும், தமிழ்நாட்டு மக்களின் விருப் பத்தையும் நிலை நிறுத்தும்படி ஆளுநரை முதலமைச்சர் கேட்டுக் கொண்டார். 

இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment