சென்னை, ஜூன் 1- மெட்ரோ ரயில்வே அதிகாரி கூறியதாவது: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்காக பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் மேலடுக்கு கட்டுமான பணிகள் நடைபெற உள்ளது. இரண்டாம் வழித்தடத்திற்காக மாற்று வழியில் பணிகளை மேற்கொண்டால் அதற்காக ரூ.400 கோடி வரையில் கூடுதல் செலவு ஏற்படும். எனவே, பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தை ஈரடுக்கு நிலையமாக மாற்றி அதை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு பயன்படுத்தினால் கட்டுமான செலவு உள்பட பல்வேறு செலவுகள் குறையும். மாதவரம்-சோழிங்கநல்லூர் வரையிலான இரண்டாம் கட்ட வழித்தடத்தின் ஒரு பகுதியாக பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையம் மாறுகிறது.
Wednesday, June 1, 2022
2ஆம் கட்ட திட்ட பணி பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தை மூட முடிவு
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment