பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கியது: வரும் 23இல் தேர்வு முடிவு வெளியீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 2, 2022

பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கியது: வரும் 23இல் தேர்வு முடிவு வெளியீடு

சென்னை, ஜூன் 2  தமிழ்நாட்டில் 10, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் முடிந்துள்ளதை அடுத்து விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் 40க்கும் மேற்பட்ட மய்யங்கள் அமைக்கப் பட்டுள்ளன.

 தமிழ்நாட்டில் கடந்த 5ஆம் தேதி முதல் பிளஸ் 2 வகுப்புக்கான தேர்வுகள் தொடங்கி 28ஆம் தேதி யுடன் முடிந்தன. 

அதன் தொட ர்ச்சியாக 10ஆம் வகுப்பு தேர்வு 6ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதியுடன் முடிந்தன. பிளஸ் 1 தேர்வுகள் 31ஆம் தேதி முடிந்தன. 

எந்த ஆண்டும் இல்லாத வகை யில் இந்த ஆண்டில் நடத்தப்பட்ட அனைத்து பொதுத் தேர்வுகளும் ஒரே நேரத்தில் நடத்தி முடிக்கப் பட்டுள்ளன.

கடந்த காலங்களில் பிளஸ் 2 தேர்வு நடந்து கொண்டு இருக்கும் போதே, விடைத்தாள் திருத்தும் பணி ஒருபுறம் தொடங்கிவிடும். ஆனால் இந்த  ஆண்டு பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகள் ஒரே நேரத்தில் நடத்தப்படுவதால், பெரும்பாலான ஆசிரியர்கள் தேர்வுப் பணியில் ஈடுபட்டனர். 

அதை கருத்தில் கொண்டு, விடைத்தாள் திருத்தும் பணி உடனடியாக தொடங்காமல் ஜூன் 1ஆம் தேதி தொடங்க முடிவு செய்யப்பட்டது.  இந்த ஆண்டுக் கான விடைத்தாள்கள் திருத் துவதற்காக தமிழ்நாடு முழுவதும் சுமார் 40 மய்யங்கள் அமைக்கப் பட்டுள்ளன.   

சென்னையில் 4 இடங்களில் தேர்வு மய்யங்கள் அமைக்கப் பட்டுள்ளன. இதையடுத்து  விடைத்தாள்கள் திருத்தும் பணி நேற்று (1.6.2022) தொடங்கியது. 

 முதல் நாளில் தலைமை தேர்வு அதிகாரிகள் விடைத்தாள்கள் திருத்தினர். இதையடுத்து உதவி தேர்வு அதிகாரிகள் விடைத்தாள் திருத்துவர். அதற்கு பிறகு முது நிலை பட்டதாரி ஆசிரியர்கள் திருத்துவார்கள். இதையடுத்து, முதுநிலை பட்ட தாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் என பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு விடைத்தாள்களை திருத்து வார்கள்.  இவர்கள்  நாள் ஒன்றுக்கு 20 விடைத்தாள்கள் திருத்துவார்கள் என்று எதிர் பார்க்கப் படுகிறது. இதையடுத்து ஜூன் 23ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும்.


No comments:

Post a Comment