"திராவிடர் கழக வரலாறு" வகுப்பில் துணைத்தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் பாடம் நடத்தினார்!
குற்றாலம், ஜூன் 10 பெரியாரியல் பயிற்சிப்பட்டறையின் இரண்டாம் நாளில் காலையில் நான்கு வகுப்புகளும், பிற்பகலில் மூன்று வகுப்புகளுமாக மிக முக்கியமான தலைப்புகளில் பாடங்கள் நடத்தப்பட்டன. துணைத் தலைவர், பொதுச்செயலாளர் மற்றும் ஆய்வாளர்கள் பாடம் நடத்தினர்.
குற்றாலம் பயிற்சிப்பட்டறையின் இரண்டாம் நாள் வகுப்புகள், வீகேயென் மாளிகையில் 9.-6.-2022 அன்று காலை 10 மணிக்குத் தொடங்கப்பட்டது. முதல் வகுப்பாக முனைவர் துரை..சந்திரசேகரன் புரா ணங்கள், இதிகாசங்கள், வேதங்களும் - புரட்டுகளும் என்ற தலைப்பில் உரையாற்றினார். அதில் வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள் எவை? அவை என் னென்ன? அதன் தன்மைகள் என்ன? என்பதைப் பற்றி விளக்கினார். பெரியார் இவைகளை எதன் அடிப் படையில் புரட்டுகள் என்று சொன்னார் என்பதை நகைச்சுவையாக சுட்டிக்காட்டினார்.
சமூக நீதி - வகுப்புரிமை
இரண்டாம் வகுப்பில் சமூகநீதி, வகுப்புரிமை வரலாறு எனும் தலைப்பில் வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி படக்காட்சி விளக்கங்களுடன் பாடம் நடத்தினார். இடையிடையே அவரே கேள் விகள் கேட்டு, சரியான பதில் சொன்னவர்களுக்கு எழுதுகோல் பரிசளித்தார். அவர் தனது படக்காட்சி யில் பல்வேறு புள்ளிவிபரங்களை காட்டி, மாணவர் களை குறித்துக்கொள்ள அவகாசம் கொடுத்தார்.
மூன்றாவது வகுப்பை கழகத்தின் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் எடுத்தார். திராவிடர் கழக வரலாறு என்பது தலைப்பு. அவர் தன்னுடைய வகுப்பில் 1944 இல் தொடங்கப்பட்ட திராவிடர் கழகம்தான் இன்றைய திராவிட மாடல் அரசின் வேர் என்றார். இன்னமும் 26 ஆண்டுகளில் திராவிடர் கழகம் நூற்றாண்டு காணப்போகிறது என்று பெரு மிதத்துடன் அறிவித்தார். கருப்புச்சட்டைக்கான வரலாற்றை எடுத்துரைத்தார். இன்னமும் சட்டப்படி நாம் சூத்திரர்தான் என்பதைச் சொல்லி, அதற்காக திராவிடர் கழகம் என்னென்ன போராட்டங்களை நடத்தியது என்று பட்டியலிட்டார்.
பெரியாரின் இன்றைய தேவை
நான்காம் வகுப்பை முனைவர் ஞா.ச.சு. நல்லசிவன் நடத்தினார். தலைப்பு “பெரியாரின் இன்றைய தேவை” என்பதாகும். அவர் தனது வகுப்பில் இன்று நமக்கு கல்வி வேலை வாய்ப்புகளில் என்னென்ன தடைகள் ஏற்பட்டுள்ளன. அவைகளிலிருந்து நாம் மீண்டுவர நிச்சயம் பெரியார் தேவை என்ற கருத்தை வலியுறுத்தும் வண்ணம் தனது வகுப்பைப் பயன் படுத்திக்கொண்டார். குறிப்பாக “இது ஒன்றிய அரசு தான்! ஓர் அரசல்ல!” என்று தெளிவு படுத்தினார்.
நாத்திகமும் - மருத்துவமும்
மதிய உணவுக்குப்பிறகு, ”நாத்திகமும், மருத்துவ மும்” எனும் தலைப்பில் முக அறுவை மருத்துவர் கவுதமன் பாடம் நடத்தினார். இவர் படக்காட்சி மூலம் ஆதி காலம் தொட்டு மூடநம்பிக்கைகள் எப்படி உருவாகி வந்தன. அதற்கு மருத்துவம் எப்படி தீர்வுகள் கண்டது என்பதை விலாவாரியாக விளக் கினார். பெரியம்மை நோய் எப்போது வந்தது? என் னென்ன விளைவுகளை ஏற்படுத்தியது? மாரியம்மன் கோபம் என்று நம்பியிருந்த மக்கள் மத்தியில் எட்வர்டு ஜென்னர் என்பவரால் தீர்வு காணப்பட்டது எவ் வாறு என்பதை விளக்கினார். தொடர்ந்து பல்வேறு நோய்களைச் சொல்லி அதற்கான தீர்வுகளை மருத் துவம் எங்ஙனம் வழங்கியது; மருத்துவர்கள் தங்கள் உயிரையும் பணையம் வைத்து மக்களை நோய்களிலி ருந்து எவ்வண்ணம் காப்பாற்றினர் என்பதை கற்பித்தார்.
திராவிட இயக்கமும் - ஜாதி உடைப்பும்
பிற்பகலில் இரண்டாம் வகுப்பில் “திராவிட இயக் கமும், ஜாதி உடைப்பும்” எனும் தலைப்பில் பேராசிரி யர் ஆ.திருநீலகண்டன் வகுப்பெடுத்தார். அவர் ஜாதி என்பது என்ன? சமூகம் என்பதற்கு என்ன வரையறை? எது திராவிடப் பண்பாடு? எது ஆரியப் பண்பாடு? இதில் மனுதர்மம் நம் மக்கள் மீது செலுத்திய தாக்கம் என்ன? அதிலிருந்து ராஜராஜசோழனே கூட தப்பிக்க முடியாமல் தனது அண்ணன் ஆதித்த கரிகாலனை படுகொலை செய்த பார்ப்பனர்களுக்கு கொடுத்த தண்டனை எப்படிப்பட்டது? என்பதையெல்லாம் விலாவாரியாக விவரித்தார். பிறகு ஜாதி அமைப் புகளிடம் ஆர்.எஸ்.எஸ். என்ன செய்தது? திராவிட இயக்கம் என்ன செய்தது? என்பனவற்றை ஆழமான ஆய்வுக்கண்ணோட்டத்தோடு மாணவர்களுக்கும் விளங்கும் வண்ணம் பாடம் நடத்தினார்.
அவதூறுகளுக்கு பதில்
இறுதி வகுப்பாக, ”பெரியார் மீதான அவதூறு களுக்கு பதில்” எனும் தலைப்பில் ச.பிரின்சு என்னா ரெசு பெரியார் வகுப்பெடுத்தார். அதில் மாணவர் களிடமே பெரியார் மீதான் என்னென்ன அவதூறுகள் என்று கேட்டு, ஒவ்வொன்றூக்கும் ஆதாரபூர்வமான பதில்களை அதற்குரிய புத்தகங்களை எடுத்துக்காட்டி - ஒவ்வொரு அவதூறுக்கும் உண்மை விளக்கம் அளித் தார். வகுப்பு முடிந்ததும் காலையிலிருந்து நடந்த வகுப்புகளிலிருந்து இரண்டிரண்டு கேள்விகள் கேட்கப்பட்டன. தீபன்ராஜ், மோகன்ராஜ், மகாமதி, நாராயணன், இளங்கோவன், வேல்முருகன், தொண் டறம், செந்தில்குமார் ஆகியோர் சரியாக பதிலளித் தனர். அவர்களுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கி பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் உற்சாகப் படுத்தினார். இரவு உணவுக்குப்பிறகு ஒரு மணி நேரம் ஓடும் பெரியார் படம் மறுபடியும் திரையிடப்பட்டது.
No comments:
Post a Comment