புதிய படிப்புகளை தொடங்க 190 கல்லூரிகள் விண்ணப்பம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 2, 2022

புதிய படிப்புகளை தொடங்க 190 கல்லூரிகள் விண்ணப்பம்

சென்னை, ஜூன் 2 கணினி அறிவியல் தொடர்பான படிப்பு களில் சேர்வதற்கு மாண வர்கள் அதிக ஆர்வம் காட்டுவ தால் அது சார்ந்த புதிய படிப்பு களை தொடங்க 190 கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்துள்ளதாக உயர்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து, உயர்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: கணினி அறிவியல் பொறியாளர் களுக்கு, அய்.டி. துறையில் அதிக வரவேற்பு இருப்பதால், 2022- - 2023ஆம் கல்வியாண்டில் கணினி அறிவியல் மற்றும் அது தொடர்பான படிப்புகளில் சேருவதற்கான ஆர்வம் எப் போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. கணினி அறிவியல் துறை சார்ந்தவர்களின் தேவை அதிகமாக இருப்பதால் சில கல்லூரிகளில்,  முந்தைய பேட்ச்களை சேர்ந்த மாணவர் களும் கூட நேர்காணலில் கலந்து கொள்ள அழைக்கப்படு கிறார்கள்.

நிறுவனங்களின் தேவை கருதி சுமார் 140 பொறியியல் கல்லூரிகள், கணினி அறிவியல் பொறியியல் , தகவல் தொழில் நுட்பம், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் உள்ளிட்ட துறைகளில் ஏற் கெனவே இருக்கும் இடங் களை விட 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட இடங்களை அதி கரித்துள்ளன. அதேபோல், கணினி அறிவியல் மற்றும் பொறியியல் (சைபர் பாதுகாப்பு), கணினி அறிவியல் மற்றும் பொறியியல் (செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல்) போன்ற புதிய படிப்பு களை தொடங்க 190 கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்துள்ளன.

 பெரிய நிறுவனங்கள் சில மாதங்களுக்கு முன்பே வளாக நேர்காணலுக்கு செல்ல தொடங்கியுள்ளதால் வரும் ஆண்டு மிகவும் நம்பிக்கைக்குரிய தாக தெரிகிறது. கோர் படிப்பு களான சிவில், மெக்கானிக் உள்ளிட்ட படிப்புகளைவிட மாணவர்கள் மற்றும் பெற் றோர்கள் கணினி அறிவியல் சார்ந்த படிப்புகள் குறித்து அதிக அளவில் விசாரிக் கின்ற னர். முந்தைய ஆண்டு களுடன் ஒப்பிடும்போது நடப்பு ஆண் டில் 80% க்கும் அதிக மானவர்கள் கணினி அறிவியல் தொடர்பான படிப்புகள் குறித்து மட்டுமே கேட்கின்றனர்.   தகவல் தொழில் நுட்ப (அய்.டி) வேலைகள் காரணமாக முக்கிய பொறியியல் படிப்புகளில் சேருவதற் கான ஆர்வம் வெகுவாகக் குறைந்து வருகிறது.  கணினி அறிவியல் தொடர்பான படிப்பு களுக்கு அதிக தேவை இருப்ப தால், 2022- -2023 கல்வி ஆண்டில்  கணினி அறிவியல் சார்ந்த பல் வேறு படிப்புகளை தொடங்க பல் வேறு பொறியியல் கல் லூரிகள் விண்ணப்பிக்க அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியுள்ளது. 

கணினி அறிவியல் தொடர் பான செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல், தகவல் பகுப்பாய்வு, இன்டர் நெட் ஆப் திங்ஸ் உள்ளிட்ட பாடங்களை  மெக்கானிக்கல் இன்ஜினி

யரிங், சிவில் இன்ஜினியரிங் உள்ளிட்ட  பாடங்களுக்கு இணையாக கட்டாயமாக்க திட்டமிட்டுள்ளதாக அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் வேல்ராஜ் கூறி யுள்ளார்.

கடந்த ஆண்டில் புதிய வர்கள் அதிக அளவில் அய்.டி துறையில் பணியமர்த்தப்பட்டுள் ளனர். இது வரும் காலங்களில் மேலும் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேலைவாய்ப்புகளை உருவாக் கும் துறைகளில் முதன்மையான துறையாக இருப்பதால் சரியான திறன்களை பெற்றவர்களுக்கு அய்.டி துறையில் நல்ல எதிர் காலம் உள்ளது. 

ஹெல்த்கேர், ஆட்டோ மொபைல் மற்றும் உற்பத்தி போன்ற பல்வேறு தொழில் களில் கூடுதலாக பொறியியல் படித்தவர்களை அய்.டிக்கு பணியமர்த்துவதை நாங்கள் பார்க்க போகிறோம். 

டிஜிட்டல் மூலம் தயார் படுத்தப்பட்ட பொறியா ளர்களுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது.

No comments:

Post a Comment