சென்னை,ஜூன் 9- தமிழ் நாட்டில் பொறியியல் படிப்பு களுக்கான கலந்தாய்வு ஆகஸ்டு 16ஆம் தேதி தொடங்கும் என உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி அறிவித்தார்.
சென்னை தலைமைச் செயல கத்தில் அவர் கூறியதாவது:-
இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் எந்த வகையில் மாணவர் சேர்க்கையை நடத் துவது என்பது குறித்து கலந்தா லோசித்து முடிவு செய்திருக் கிறோம். குறிப்பாக பொறியியல் கல்லூரிகளில் அதிகமாக மாணவர்கள் சேராத சூழ்நிலை, குறிப்பிட்ட காலத்தில் இடம் கிடைக்காத சூழ்நிலை உள்பட பல்வேறு காரணங்களையும் ஆலோசித்தோம். சென்ற ஆண்டு அண்ணா பல்கலைக் கழகத் தில் மட்டும் 631 இடங்கள் காலியாக இருந்தன.
அதற்கு முந்தைய வருடம் 750 இடங்கள் காலியாக இருந் தது. இதற்கு காரணம் அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து விட்டு பின்னர் நீட் தேர்வு மூலம் மருத்துவ கல்லூரி உள்பட மற்ற கல்லூரிகளில் இடம் கிடைத்த காரணத்தால் அங்கு சென்று சேர்ந்து விடுவதுதான். அதனால் இங்கு காலி இடங்கள் ஏற்பட்டு விடுகிறது. எனவே இவற்றை மாற்றி அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இப் போது இந்த ஆண்டு நீட் தேர்வு முடிவு வந்த பிறகுதான் பொறியியல் கல்லூரி சேர்க்கை தொடங்கப்படும்.
பிளஸ்-2 தேர்வு முடிவு வந்த பிறகு இணையத்தில் விண்ணப் பம் சமர்ப்பிக்க இறுதி நாள் 19.7.2022. அதாவது ஜூன் 20இல் தொடங்கி ஜூலை 19 வரை இணையவழி மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த விண் ணப்பத்தை சொந்தமாகவும் விண்ணப்பிக்கலாம். அல்லது அவர வர் படிக்கும் பள்ளிகள் மூலமாகவும் விண்ணப்பிக் கலாம். இது தவிர தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 110 இடங்களிலும் விண்ணப்பிக்க வசதிகள் ஏற்படுத்தப்படும். விண்ணப்பங்கள் பெற்ற பிறகு சான்றிதழ் சரி பார்க்கப்படுவது 20.7.2022 முதல் 31.7.2022 வரை நடைபெறும். அதன் பிறகு தர வரிசை பட்டியல் 8.8.22 அன்று வெளியிடப்படும்.
ஆகஸ்டு 16 முதல் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படை வீரர்கள், விளையாட்டு வீரர் களுக்கு இட ஒதுக்கீடு (கவுன்சிலிங்) நடைபெறும். அதன் பிறகு 22ஆம் தேதியில் இருந்து பொது கல்வி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு, 22.8.2022 முதல் 14.10.2022 வரை இட ஒதுக்கீடு நடைபெறும். இதில் துணை கலந்தாய்வு 15.10.2022, 16.10.2022 நடைபெறும். எஸ்.சி. கலந்தாய்வு 17, 18 ஆகிய 2 நாட்கள் நடை பெறும். 18ஆம் தேதியுடன் அட் மிஷன் முடிந்து விடும். இதில் முதல் 15 ஆயிரம் பேருக்கு 1 வாரத்தில் கலந்தாய்வு நடை பெறும்.
அந்த ஒரு வாரத்துக்குள் அவர்கள் பணம் கட்டியாக வேண்டும். அப்படி கட்டா விட்டால் அவர்களது சேர்க்கை ரத்து செய்யப்பட்டு அடுத்த மாணவருக்கு அந்த இட வாய்ப்பு வழங்கப்படும். தனியார் அல்லது அரசு பொறியியல் கல்லூரி என எந்த கல்லூரியாக இருந் தாலும் ஒரு வாரத்தில் பணம் கட்ட வேண்டும். 2 மாதத்தில் 4 ரவுண்டு கலந்தாய்வு முடிவு பெறும்.
கலைக்கல்லூரிகள்
பிளஸ்-2 தேர்வு முடிவு ஜூன் 23இல் வெளி யிடப்படுவதால் அரசு கலைக் கல்லூரிகளில் சேர ஜூன் 27இல் விண்ணப்பம் போடலாம். கடைசி தேதி ஜூலை 15 வரை விண்ணப் பிக்கலாம். ஜூலை 25ஆம் தேதி முதல் மாணவர்கள் சேர்க்கப்படு வார் கள்.
-இவ்வாறு அமைச்சர் முனை வர் க.பொன்முடி தெரிவித்தார்.
No comments:
Post a Comment