சென்னை, ஜூன் 3 தமிழ்நாட்டில் 145 பேர் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூரில் மட்டும் 123 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் புதிதாக 14 ஆயிரத்து 843 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஆண்கள் 88 பேரும், பெண்கள் 57 பேரும் என 145 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய் யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்ச மாக சென்னையில் 58 பேர், செங் கல்பட்டில் 53 பேர், திருவள்ளூரில் 12 பேர் என 123 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர்.
11 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. 27 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை. 12 வயதுக்கு உட்பட்ட 8 குழந்தை களும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 18 பேரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 16 மாவட்டங்கள் கரோ னாவே இல்லாத மாவட்டங்களாக உருவாகியுள்ளன. இந்த மாவட் டங்களில் புதிதாக யாருக்கும் கரோனா தொற்றும் இல்லை, சிகிச்சையிலும் யாரும் இல்லை.
தமிழ்நாட்டில் 77-ஆவது நாளாக எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை. இதுவரை 38 ஆயிரத்து 25 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். மேலும் நேற்றைய (2.6.2022) நில வரப்படி 711 பேர் கரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வரு கின்றனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 326 பேரும், செங்கல் பட்டில் 261 பேரும் சிகிச்சையில் உள்ளனர். தமிழ்நாட்டில் 42 பேர் மட்டுமே மருத்துவமனை சிகிச் சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 63 பேர் கரோனா நோயில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள் ளனர். இதுவரை தமிழ்நாட்டில் 34 லட்சத்து 17 ஆயிரத்து 22 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment