சென்னையில் ஜூன் 12-இல் செம்மொழிவேள் விருது வழங்கும்விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 9, 2022

சென்னையில் ஜூன் 12-இல் செம்மொழிவேள் விருது வழங்கும்விழா

சென்னை, ஜூன் 9 மும்பை இலெ முரியா அறக்கட்டளை மற்றும் தமிழ் அறக்கட்டளை பெங்களூரு ஆகியவை இணைந்து நடத்தும் செம்மொழிவேள்விருது வழங்கும் விழா சென்னையில் ஜூன் 12-ஆம் தேதி நடக்கவிருக்கிறது.

இது குறித்து மும்பை இலெ முரியா அறக்கட்டளை மற்றும் தமிழ் அறக்கட்டளை பெங்களூரு கூட்டாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 

மும்பை இலெமுரியா அறக்கட் டளை மற்றும் தமிழ் அறக்கட்டளை பெங்களூரு ஆகியவை இணைந்து சென்னை, ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள முத்தமிழ்பேரவை ராஜரத்தினம் கலையரங்கத்தில் ஜூன் 12-ஆம் தேதிமாலை 5.30 மணிக்கு செம்மொழி வேள் விருது வழங்கும் பாராட்டு விழா நடக்க விருக்கிறது. 

அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத் தமிழ் இருக்கையின் ஆட்சிக்குழு உறுப்பினர் முனைவர் மு.ஆறுமுகம் தலைமையில் நடக்கும் விழாவில், இலெமுரியா அறக்கட் டளை நிறுவனத்தலைவர் சு.குமண ராசன் அனைவரையும் வரவேற் கிறார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மாணவர்கள் அரங்கேற்றும் இயல் இசை கூத்தரங்கம் நடக்கவிருக்கிறது.

விழாவில் தமிழுக்குத் தொண்டாற்றிய அறிவிற்செறிந்த தமிழறிஞர்களான‌ கவிப்பேரருவி ஈரோடு தமிழன்பன், முனைவர் பொன்.கோதண்டராமன் (எ) பொற்கோ, முனைவர் இ.சுந்தர மூர்த்தி, முனைவர் ப.மருதநாயகம், முனைவர் மறைமலை இலக்குவனார் ஆகியோருக்கு செம்மொழி வேள் விருது வழங்கி பாராட்டு தெரிவிக்கப் படுகிறது. 

இதை தொடர்ந்து, 2021-ஆம் ஆண்டுக்கான சிலம்பொலி செல்லப் பனார் சிறப்பு விருது சென்னை அமிழ்தத் தமிழ் ஆய்வரங்கத்தின் தலைவர் முனைவர் யுவராச அமிழ்தனுக்கு வழங்கப்படுகிறது.

இதை தொடர்ந்து, தோல் பொருட்கள் ஏற்றுமதிக்கழகத்தின் செயல் இயக்குநர் இரா.செல்வம், வருமானவரித்துறை கூடுதல் ஆணையர் முனைவர் சு.பாண்டியன், காரைக்குடி சேதுபாஸ்கரா வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம், சென்னை சேதுபாஸ்கரா கல்விக்குழுமத்தின் தலைவர் முனைவர் சேதுகுமணன், தஞ்சாவூர் பாரத் கல்விக்குழுமத்தின் தலைவர் புனிதா கணேசன், கட லோரப் பாதுகாப்புப்படை கமாண் டன்ட் நா.சோமசுந்தரம், தமிழியக்  கத்தின் வடதமிழக ஒருங்கிணைப் பாளர் கு.வணங்காமுடி ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள். நிறைவாக, தமிழ் அறக்கட்டளை பெங்களூரு புலவர் கார்த்தியாயினி நன்றி கூறுகிறார். இந்த விழாவில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment