வைரலாகும் அய்.ஏ.எஸ். அதிகாரியின் 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 16, 2022

வைரலாகும் அய்.ஏ.எஸ். அதிகாரியின் 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்

புதுடில்லி, ஜூன் 16"புத்திக்கூர்மை யையும், நற்பண்பையும் சேர்த்தே நல்குவதுதான் கல்வியின் உண்மை யான இலக்கு" என்று கூறியவர் மார்டின் லூதர் கிங் ஜூனியர். ஆனால், நம் கல்வி முறை அப்படியான இலக்கைக் கொண்டிருக்கிறதா? பள்ளியில் தொடங்கும் மதிப்பெண் ணுக் கான ஓட்டம் கல்லூரியிலும் நீடிக்கிறது. மதிப்பெண் மட்டும்தான் ஒருவரின் கல்வித்திறனின் உண் மையான அளவீடு என்று நாம் புரிந்து வைத்திருக்கிறோம்.

அதனாலேயே 90%-க்கும் கீழ் உள்ள எந்தவொரு மதிப்பெண்ணும் நமக்கு மதிப்பில்லா பொருளாகி விடுகிறது. மதிப்பெண் சான்றிதழில் இடம்பெறக்கூடிய பெரிய கூட்டுத் தொகை மட்டும்தானா கல்வி?

இல்லை என்று நிரூபிப்பதற்காக வைரலாகிக் கொண்டிருக்கிறது குஜ ராத் அய்ஏஎஸ் அதிகாரியின் 10-ஆம் வகுப்புச் சான்றிதழ்.

அவனீஷ் சரண் என்ற அந்த அய்ஏஎஸ் அதிகாரி தனது நண்பரும் பரூச் மாவட்ட ஆட்சியருமான துஷார் சுமேராவின் ஒளிப்படத் தையும் அவரது 10-ம் வகுப்பு மதிப் பெண் சான்றிதழை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

அந்தப் ஒளிப்படங்களுக்குக் கீழ், "பரூச் மாவட்ட ஆட்சியர் துஷார் சுமேரா 10-ம் வகுப்பில் ஆங்கிலத்தில் 35, கணிதத்தில் 36, அறிவியல் பாடத் தில் 38 மட்டுமே வாங்கியிருந்தார். அவரது கிராமத்தில் மட்டுமல்ல, பள்ளியில் உள்ளவர்களும் கூட துஷார் சுமேரா எதற்கும் லாயக் கற்றவர் என்றே நினைத்தனர். ஆனால், துஷார் சுமேரா இன்று மாவட்ட ஆட்சியர்" என்று எழுதி யிருந்தார்.

அந்த மதிப்பெண் சான்றிதழுக்கு கீழ் நிறைய உத்வேகம் தரும் பின்னூட்டங்களும் பகிரப்பட்டுள் ளன. அதில் ஒருவர் "எப்போதுமே உங்களுடைய மதிப்பெண் உங்களுக் கான மதிப்பீடு அல்ல. மதிப்பெண் என்னவாக இருந்தாலும் எதிர் காலத்தை நீங்கள் தீர்மானிக்கலாம்" என்று எழுதப்பட்டுள்ளது.

உண்மைதான்!

தமிழ்நாடு மாணவர்கள் அடுத்த வாரம் பிளஸ் 2 ரிசல்ட்டுக்காக காத்திருக்கிறார்கள். 

இந்தச் சூழலில் இந்த வைரல் சான்றிதழும் அதற்கான பின்னூட் டங்களும் அவர்களுக்கு நிச்சயமாக உத்வேகம் தரலாம்.

No comments:

Post a Comment