சென்னை, ஜூன் 8 கடலில் மூழ்கித் தவிப்பவர்களை பாது காப்பதற்காக, 14 கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த 1,000 மீனவர்களுக்கு `கடற்கரை உயிர் பாதுகாப்பு மற்றும் மீட்புப் பயிற்சி' அளிக்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (7.6.2022) தொடங்கி வைத்தார்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: தமிழ்நாடு 1,076 கி.மீ. நீள முள்ள கடற்கரைகளை கொண் டுள்ளது. இங்குள்ள 608 மீனவ கிராமங்களில், 10.48 லட்சம் மீனவர்கள் வாழ்கின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள பல அழகிய கடற்கரைகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் பொழுதுபோக்குக்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில், கடற்கரைப் பகுதிகளில் அவ் வப்போது நேரிடும் விபத்து களால் விலை மதிப்பற்ற மனித உயிர்களை இழக்க நேரிடுகிறது.
இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்கவும், கடலில் தவறி விழுந்து மூழ்கித் தவிப்பவர்களை காப்பாற்றும் வகையிலும், மீனவ இளைஞர்களுக்கு கடற்கரை உயிர்காக்கும் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.
தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தின் நிதியுதவியுடன், ரூ.53 லட்சம் மதிப்பில் `அய்டி யுஎஸ் ஸ்போர்ட்ஸ் அண்டு சேஃப்டி' என்ற தனியார் நிறுவனம் மூலம், தமிழ்நாட்டில் 14 கடற்கரை மாவட்டங்களைச் சேர்ந்த 1,000 மீனவ இளைஞர் களுக்கு இப்பயிற்சி வழங்கப் படுகிறது.
இந்த திட்டத்தை, முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தலை மைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக நேற்று தொடங்கிவைத்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் கோவளத்தில் 25 மீனவ இளைஞர்களுக்கு இப்பயிற்சி உடனடியாக தொடங்கப்பட் டுள்ளது.
இந்தப் பயிற்சி, மீனவ இளைஞர்களின் இயற்கையான நீச்சல் திறனை மேம்படுத்து வதுடன், பாதிக்கப்பட்டவர் களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்முன், அவர்களுக்குத் தேவையான முதலுதவி அளிப்பதற்கும் உறுதுணையாக அமையும்.
இப்பயிற்சி முடித்தவர்கள் மூலம் அவசர காலங்களில், பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கவும், கடற்கரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படும் விபத்துகளைக் குறைக்கவும் முடியும். பயிற்சி பெற்ற மீனவ இளை ஞர்களின் சேவையை புயல், வெள்ளம் போன்ற பேரி டர் காலங்களிலும் பயன் படுத்திக் கொள்ள இயலும். இப் பயிற்சி மூலம், தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவ இளைஞர்களுக்கு, கடற் கரை பாதுகாப்பு, மீட்புப் பணி கள், கடற்கரை விடுதிகள் மற்றும் சுற்றுலா சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்பு கிடைக்கவும் உதவியாக அமை யும். தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, மீன் வளத் துறைச்செயலர் தெ.சு.ஜவ ஹர், ஆணையர் கே. சு.பழனி சாமி உள்ளிட்டோரும் கோவ ளத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ. அன்பரசன், நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம், சட்ட மன்ற உறுப் பினர் எஸ்.எஸ்.பாலாஜி, செங் கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ.ர. ராகுல்நாத் உள்ளிட் டோரும் பங்கேற்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
No comments:
Post a Comment