சென்னை, ஜூன் 2 ஆவடி மாநகராட்சியில் பாரம்பரிய திருவிழா நடக்க இருப்பதாக அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் கூறினார்.
இதுகுறித்து அமைச்சர் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்ட வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம், உணவு பாதுகாப்புத்துறை இணைந்து உணவுத் திருவிழா 2022 நிகழ்ச்சி நடத்திட உள்ளது.. வரும் 10, 11 மற்றும் 12 என மூன்று நாள்கள் ஆவடி கனரக வாகன தொழிற்சாலை மைதானத்தில் பாரம்பரிய நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
உணவு விழாவில் உள்ளூர் உணவகங்கள் முதல் உலக நாட்டு உணவகங்கள் வரை சுமார் 150 உலகப் புகழ்பெற்ற உணவுகளின் அறுசுவை அரங்கங்கள் அமைக்கப்படவுள்ளது. சுவையில், விலையில், புதுமை, புத்துணர்வு என ஒவ்வொரு அரங்கிலும் சிறப்பான வகைகள் நிறைந்திருக்கும்.
மூன்று நாள் நிகழ்விலும் பல்வேறு நிகழ்சிகள் நடைபெறுகிறது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பின் ஜான் வர்கீஸ், ஆவடி மாநகராட்சி மேயர் ஜி.உதயகுமார், டாக்டர் எம்.ஜெகதீஸ் சந்திரபோஸ், உணவுப்பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.
No comments:
Post a Comment