வண்ணத்துப்பூச்சியின் விளைவும், தமிழர் தலைவரின் வெற்றியும். - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 7, 2022

வண்ணத்துப்பூச்சியின் விளைவும், தமிழர் தலைவரின் வெற்றியும்.

- உடுமலை அ.ப. நடராஜன்

வண்ணத்துப் பூச்சியின் விளைவு. (Butterfly effect) என்பது கேயான் தியரி. இந்தக் கோட்பாட்டின் தந்தை , அமெரிக்க வானிலை ஆய்வாளர் எட்வர்டு லோரன்ஸ்.இவர் 1863இல் கூறியதாவது. “பிரேசில் நாட்டில் பறந்து கொண்டிருக்கும் ஒரு பட்டாம்பூச்சியின் சிறகுகளின் படபடப்பினால் ஏற்படும் சலசலப்பிற்கும், டெக்ஸாஸில் ஏற்படும் சூறாவளிக்கும் தொடர்பு உண்டு” என்றார் .

ஆரம்பத்தில் உருவாக்கப்படும் மிகச் சிறிய ஒரு செயல், அதன் தொடர்ச்சியான சம்பவங்களால் நாம் எதிர்பார்க்க முடியாத மாபெரும் விளைவுகளைத் தோற்றுவிக்கலாம் என்பதே வண்ணத் துப் பூச்சியின் விளைவு ஆகும் . ஒரு சிறிய வண்ணத்துப்பூச்சியின் சிறகுகளின் படபடப்பே மாபெரும் விளைவுகளை உண்டாக்கும் என்றால்... நம் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களின் சமீபத்திய பெரும் பயணம் எவ்வளவு பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்?

நீட் தேர்வு எதிர்ப்பு, நவீன கல்வித் திட்டமான தேசியக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமைகள் பறிப்புக்கு எதிரான மக்கள் விழிப்புக்கான பெரும் பயணம் அல்லவா இது? 38 மாவட்டங்கள் , 40 பெரும் பொதுக்கூட்டங்கள்,. இரண்டு மாநிலங்கள், கடும் வெயில் காலத்திலும் 4700 கிலோமீட்டர் பயணம், உடன் 30 தோழர்கள், 5 வாகனங்கள்,பிரச்சார பெரும்பயண விளக்கப் புத்தகங்கள் விற்பனை 5 லட்சம் ரூபாய்க்கும் மேல்.

மேலும், கூட்டங்களில் கலந்து கொண்ட அமைச்சர் பெருமக்கள்; எம்.பிக்கள்; மதச்சார்பற்ற கூட்டணித் தலைவர்கள்; திராவிடர் கழக, திராவிட முன்னேற்றக் கழகப் பொறுப்பாளர்கள்; மேலும், நிறைவு விழாவில் கலந்து கொண்ட சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வருகை; இவர்களின் பாராட்டுகளும், செயல்பாடுகளும் பட்டாம்பூச்சியின் சலசலப்பை விட எவ்வளவோ பெரியது. இதற்கான பெரிய மாற்றங்கள் சங்கிலித் தொடர் போல நிகழத்தான்தான் போகின்றன .அவற்றை நாம் காணத்தான் போகிறோம் . கேயான் தியரி குறிப்பிடுவது போல இவைகள் தவிர்க்க முடியாதவை.

இப்படி இருக்க 23.4.2022 விடுதலை ஞாயிறு மலரில் ஒரு வாசகர் , ஆசிரியரிடம் ஒரு கேள்வி கேட்டுள்ளார். கேள்வி : தாங்கள் மேற்கொண்டிருக்கும் பிரச்சாரப் பெரும் பயணத்தால் தமிழ்நாட்டிற்கு ‘நீட் ‘டிலிருந்து விலக்கு கிடைத்துவிடுமா ?

தன் 10 வயதில் இருந்து இன்றைய நாள் வரை 80 வருட காலமாகப் ‘ பிரச்சாரம், போராட்டம், அவ்வப்போது சிறைவாசம் இவற்றிலேயே வாழ்வைக் கழித்து கொண்டுவரும் நம் ஆசிரியர் கண்ட வெற்றிகள் ஏராளம் ஏராளம். இத்தனை வெற்றி கண்ட நம் ஆசிரியர் பதில் தருகிறார் . பதில் : “என்னால் - நம்மால் முடிகிறதோ இல்லையோ - மக்கள் எழுச்சியால் எதுவும் முடியும். இது ஒரு விழிப்புணர்வுப் பயணம். தூங்கியவர் விழித்தால் விடிவது உறுதி”. என்று. வண்ணத்துப்பூச்சியின் விளைவு எப்படி சூறாவளியை ஏற்படுத்தும் அளவுக்குத் தொடர்புடையதோ, அதேபோல நம் ஆசிரியர் அவர்களின் பயணத்துக்கும், எந்த எந்த இடங்களில் எல்லாம் மாற்றங் கள் ஏற்படப் போகின்றன என்பதற்கும் தொடர்பு நிச்சயம் உண்டு.

“For every action , there is an equal and opposite reaction “ .ஒவ்வொரு விளைவுக்கும் அதற்கு இணையான எதிர்வினை உண்டு, என்ற அய்சக் நியூட்டனின் மூன்றாம் விதியைக் கேள்வி கேட்ட அந்த வாசகர் புரிந்து கொள்வாராக . இந்த மூன்றாம் விதி என்றும், எங்கும் பொய்த்ததில்லை .

தமிழர் தலைவருக்கு என்றும் எங்கும் வெற்றி நிச்சயமே .

No comments:

Post a Comment