உற்பத்தி தொழிலுக்கு உகந்த இடம் தமிழ்நாடே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 4, 2022

உற்பத்தி தொழிலுக்கு உகந்த இடம் தமிழ்நாடே!

சென்னை, மே 4 உற்பத்தி தொழி லுக்கு உகந்த இடமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று ஜப்பான் நாட்டு தூதரக அதிகாரி தாகா மசயுகி பாராட்டு தெரிவித்தார். 

இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான ராஜாங்க ரீதியான உறவு 70 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. 2 நாடுகளுக்கு இடையேயான வர்த்தக தொடர்பும் வலுவாக உள்ளது. இந்த உறவை மேலும் மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப் படுகின்றன.

 ஜப்பானின் முதலீடு

இந்தியா மற்றும் ஜப்பான் நாட்டு அரசுகளுக்கு இடையேயான பொருளாதார உறவு தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. 2 நாடுகளுக்கு இடையேயான மக்கள் தொடர்பும் வளர வேண்டும் என்பது எங்களின் நோக்கமாகும்.

கருத்தரங்கு

இந்திய பசிபிக் பகுதியில் நிலவும் ராஜாங்க ரீதியான சூழல்களில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்த சூழ்நிலையை மனதில் கொண்டு இந்தோ ஜப்பான் தொழில் மற்றும் வர்த்தக சபை ஒரு மிக பெரிய கருத்தரங்கை சென்னையில் 7 மற்றும் 8ஆம் தேதிகளில் நடத்த உள்ளது. 

இதில் இந்தியா மற்றும் ஜப்பானின் ராஜாங்க பிரமுகர்கள், பாதுகாப்பு பிரிவு நிபுணர்கள், பத் திரிகையாளர்கள், கல்வியாளர்கள் பங்கேற்கின்றனர்.

 5 ஆயிரம் ஜப்பான் நிறுவனங்கள்

இந்தியாவில் ஜப்பான் நிறுவ னங்கள் 5 ஆயிரம் உள்ளன. அவற்றில் 600 தமிழ்நாட்டில் அமைந்துள்ளன. அவற்றில் பெரும் பாலானவை உற்பத்தி நிறுவனங் களாகும். பெங்களூருவில் ஜப் பானின் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகம் அமைந் துள்ளன. 

உற்பத்தி தொழிலுக்கான உகந்த பகுதியாக தமிழ்நாடு அமைந்துள்ளது. 

அதுமட்டுமல்லாமல் தகவல் தொழில்நுட்ப நிறுவனங் களையும் தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவதில் தமிழ்நாடு அரசு முனைப்பு காட்டி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment