ரெய்ச்சூர், மே.31- கருநாடக பாஜக தலைவர் கே.எஸ். ஈஸ்வரப்பா, வருங்காலத்தில் மூவர்ணக் கொடிக்குப் பதிலாக காவிக் கொடி வரலாம் என்று கூறி மீண் டும் சர்ச்சையைக் கிளப்பியுள் ளார்.
கருநாடக மேனாள் அமைச் சரும், அம்மாநில பாஜக தலை வருமான கே.எஸ்.ஈஸ்வரப்பா, எதிர்க்காலத்தில் நாட் டின் தேசியக் கொடியாக ‘பகவா’ அல்லது காவிக் கொடியாக மாறலாம் எனக் கூறி மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார். காவிக் கொடி தியாகத்தின் சின்னம் என்றும் அவர் கூறினார்.
“இந்த நாட்டில் காவிக் கொடி நீண்ட காலமாக மதிக்கப்படுகிறது. அதற்கு ஆயிரக்கணக்கான ஆண் டுகள் வரலாறு உண்டு. காவிக் கொடி தியாகத்தின் சின்னம். அதை வளர்த்தது ஆர்.எஸ்.எஸ். காவிக்கொடி முன் பிரார்த்தனை செய்கிறோம். காவிக்கொடி இன்று அல்லது ஒருநாள் இந்த நாட்டில் தேசியக் கொடியாக மாறலாம். அதில் எந்த சந்தேகமும் இல்லை.” என்று கூறினார்
கே.எஸ். ஈஸ்வரப்பா.
“அவர்கள் [காங்கிரஸ்] சொல் லும் பொழுதெல் லாம் நாங்கள் மூவர்ணக் கொடியை ஏற்ற வேண்டியதில்லை. நமது அரச மைப்புச் சட்டத்தின்படி மூவர் ணக் கொடிதான் தேசியக் கொடி, அதற்குத் தகுதியான மரியா தையை நாங்கள் தற்போது தருகி றோம்,” என்றும் கே.எஸ்.ஈஸ் வரப்பா கூறினார்.
ஊழல் குற்றச்சாட்டின் பேரில் ஒப்பந்ததாரர் இறந்ததைத் தொடர்ந்து அமைச்சர் பதவியிலிருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட ஈஸ்வரப்பா, இதற்கு முன் பும் இதே விவகாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார். பிப்ரவரி 9ஆம் தேதி “செங்கோட்டை உள் பட எல்லா இடங்களிலும் காவிக் கொடி ஏற்றுவோம். இன்றோ நாளையோ இந்தியா ஹிந்து நாடாக மாறும்.” என்று பேசியிருந் தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment