சென்னை, மே 30 பாதுகாப்பான நகரம் குறித்த பேரணியில் சக பெண்களுடன் சேர்ந்து மேயர் ஆர்.பிரியா சைக்கிள் பயணம் மேற் கொண்டார்.
சென்னை பாலின வேறுபாடு இல்லாமல் பெண்கள் இயல்பாக பொது இடங்களை உபயோகப்படுத்துவதற்காகவும், பெண்களின் பாதுகாப்பு எல்லோருடைய பொறுப்பு என்பதை உணர்த்தும் வகையிலும், 'சிங்கார சென்னை 2.0' வீதி விழாவின் ஒரு பகுதியாக, பாதுகாப்பான சென்னை என்ற கருத்தை வலியுறுத்தி 28.5.2022 அன்று பெண்களுக்கான இரவு நேர சைக்கிள் ஓட்டும் பேரணி நடைபெற்றது.
சென்னை இந்திரா நகர் பறக்கும் ரயில் நிலைய நுழைவுவாயில் அருகில் நடைபெற்ற பேரணியை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த சைக்கிள் பேரணியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கலந்து கொண்டு, சக பெண்களுடன் சேர்ந்து சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி துணை ஆணையர்கள், பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment