சிதம்பரம் நடராசன் கோயிலை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 5, 2022

சிதம்பரம் நடராசன் கோயிலை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும்

சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

சென்னை,மே5- சிதம்பரம் நடராசன் கோயிலை தமிழ்நாடு அரசின் கட்டுப் பாட்டில் கொண்டுவர சிறப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத் தியுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்ப தாவது: 

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள தில்லை நடராசன் கோயில், சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட பழைமையான கோயிலாகும். ஆனால், இந்த கோயிலை தாங்கள்தான் கட்டியதாகவும், தாங்கள் குறிப்பிடும் ஆகமவிதிகளின் படியே வழிபாட்டு முறைகள் அமைய வேண்டும் எனவும் தீட்சிதர்கள் கூறுகின்றனர். கோயில் நிர்வாகத்தில் தீட்சிதர்களுக்கே முழுமையான உரிமை உள்ளதாக உரிமை கோருவதோடு, இதர சமயச் சான்றோர்களை தமிழில் பாடவும் அனுமதிக்க மறுக்கின் றனர்.

வடலூர் வள்ளலார் தனது திருவருட் பாவை இந்த கோயிலில் அரங்கேற்ற விரும்பியபோது அதை தடுத்த தீட்சிதர்கள் அதற்கு பிறகும் தொடர்ச்சியாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். சமீபத்தில் திருச்சிற்றம்பல மேடையில் தமிழில் பாட முயற்சித்த ஆறுமுக நாவ லரை அனுமதிக்க மறுத்து தாக்கியது உட் பட அவர்களின் அத்துமீறல் நடவடிக் கைகள் இன்றளவும் தொடர்கின்றன.

தீட்சிதர்கள், கோயிலை ஏதோ தங்கள் சொந்த சொத்து போல பாவிப்பதோடு, தொடர்ச்சியாக பல்வேறு முறைகேடு களிலும் ஈடுபட்டு வருகின்றனர். தொடரும் சர்ச்சைகள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், தில்லை நடராசன் கோயிலை பாதுகாக்க வும், கோயில் நிர்வாக பொறுப்பை முழு மையாக தமிழக இந்து சமய அறநிலையத் துறையின்கீழ் கொண்டு வரவேண்டும். அதற்காக தமிழ்நாடு அரசு ஒரு சிறப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள காசி விசுவநாதர் கோயிலை அம்மாநில அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற் கான வகையில் 1983 ஆம் ஆண்டு ஒரு சிறப்பு சட்டத்தை பிறப்பித்து, நிர்வகித்து வருகிறது. அதுபோல தமிழ்நாடு அரசும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment