ஆண்டிப்பட்டி, மே 6 தேனி மாவட்டம், ஆண்டிப் பட்டி அருகே மறவபட்டி கிராமத்தில் முத்தாலம்மன் கோயில் சித்திரை விழா என கடைசி நாளன்று ஒரு வருக்கொருவர் துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும் விநோத மூடநிகழ்ச்சி நடைபெற்றது. கிராமத்தில் உள்ள மாமன், மைத்துனர்கள் மாறி மாறி துடைப்பத்தால் அடித்துக்கொண்டனராம்.
அடிப்பதற்கு முன்பாக துடைப்பத்தை சாக்கடை நீரிலும், சேறு மற்றும் சகதியிலும் நனைத்துக் கொண்டு ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டனர். மேலும் சிலர் சேற்றிலும், சகதியிலும் படுத்துக்கொண்டு தங்கள் உறவினர்களிடம் துடைப்பத்தால் அடிவாங்கினராம்.
இந்த கேலிக் கூத்தை சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் திரண்டு வந்து பார்த்தனர். துடைப்பத்தை சாக்கடையில் நனைத்து தாக்கிக் கொள்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் என்றும், பிரிந்த உறவுகள் மீண்டும் மலரும் என்றும் அந்தக் கிராம மக்கள் நம்புகின்றனராம்!
No comments:
Post a Comment