புதுடில்லி,மே 3- கூடுதல் மதிப்பெண் பெற்ற இடஒதுக்கீட்டுப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு பொதுப் பிரிவிலும், முன்னுரிமை தரவேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு, ராஜஸ்தான் பிஎஸ்என்எல் வட்டம் சார்பில் டெலிகாம் டெக்னிக்கல் அசிஸ்டென்ட்ஸ் (டிடிடி) என்றகாலிப் பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
தேர்வில் தகுதி பெற, பொதுப் பிரிவினருக்கு குறைந்தபட்ச மதிப் பெண்கள் 40 சதவீதமாகவும், இடஒதுக்கீட்டில் வரும் பிரிவினருக்கும் குறைந்தபட்ச மதிப்பெண்கள் 33 சதவீதமாகவும் நிர்ண யிக்கப்பட்டது.
ஆனால், தேர்வில், பொதுப் பிரிவினரில் ஒருவர் கூட குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெறவில்லை. அதேசமயம், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் 4 பேர் தங்களுக்கான குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி யடைந்தனர்.
மதிப்பெண்கள் தளர்வு: இதில் அலோக் குமார் யாதவ் என்பவர் 39.87 சதவீதமும் (ஓபிசி), தினேஷ் குமார் என்பவர் 38.5 சதவீதமும் (ஓபிசி) பெற்றனர். இந்நிலையில், எழுத்துத் தேர்வில் பெரும்பாலான தேர்வர்கள் தகுதிபெறவில்லை என்பதால் பிஎஸ்என்எல் நிர்வாகம் பொதுப் பிரிவினருக்கு 30% ஆகவும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 23% ஆகவும் மதிப்பெண்கள் வரம்பை தளர்த்தியது. இந்த புதிய வழிமுறைகளின் படி, பொதுப்பிரிவு வகுப்பினரில் 5 பேர் பணியில்சேர தகுதி பெற்றனர். பிஎஸ்என்எல் நிர்வாகத்தின் இந்த முடிவை எதிர்த்து சந்தீப் சவுத்ரி என்பவர் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர், தனதுமனுவில் கூறும்போது, "விண்ணப்பதாரர்களை தேர்வு செய்வதற்காகமட்டும் குறைந்தபட்ச மதிப்பெண்களை மாற்றியமைத்தது செல்லாதது ஆகும்.
ஏற்கெனவே, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் 2 தேர்வர்கள் (அலோக் குமார் யாதவ் மற்றும்தினேஷ் குமார்) பொது முறைகளின் மூலம் நிரப்பப்படும் காலிப்பணியிடங்களுக்கு தகுதியின் அடிப்படையில், தெரிவு செய்யப்படுவதற்கு தகுதி யுடையவராவர். அவர்கள், பொதுப் பிரிவில்தான் தேர்வாகி இருக்க வேண்டும். இதன் காரணமாக, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புக்காக ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட காலிப் பணியிடத்தின் எண்ணிக்கை எந்தவகையிலும் பாதிக்கப்படக் கூடாது” என்றார்.
தீர்ப்பாயத்தை எதிர்த்து மனு
இந்த மனுவை விசாரித்த நடுவர் தீர்ப்பாயம், ஏதேனும் வாய்ப்பிருந் தால், பாதிக்கப்பட்ட விண்ணப்பதாரருக்கு உடனடியாக சம வாய்ப்பை வழங்கவேண்டும் என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து, பிஎஸ்என்எல் நிர்வாகம் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், "இட ஒதுக்கீட்டுப் பிரிவுகளைச் சேர்ந்த 2 தேர்வர்கள் பொதுப் பிரிவில் தேர்வாக தகுதியுடையவர்கள். அலோக்குமார் யாதவ் மற்றும் தினேஷ் குமார் இருவரையும், பொதுப்பிரிவு பட்டியலில் சேர்க்க வேண்டும்" என்று உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட இந்த வழக்கு நீதிபதிகள், எம்.ஆர். ஷா, பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், 1992இல் நடந்த ஒன்றிய அரசு தொடர்ந்து நீதிபதி இந்திரா சாஹ்னி விசாரித்த வழக்கின் தீர்ப்பைச் சுட்டிக் காட்டி ராஜஸ்தான் உயர்நீதி மன்றம் அளித்த தீர்ப்பு செல்லும்என்று தீர்ப்பு வழங்கினர். மேலும், பொதுப்பிரிவில் கடைசி மதிப்பெண் பெற்று தேர் வான நபரை விட, அதிக மதிப்பெண் பெற்ற இடஒதுக்கீடு வகுப்பைச் சார்ந்த விண்ணப்பதாரர், பொதுப்பிரிவின் கீழ் தேர்வு செய்யப்படுவதற்கு தகுதியுடையவர் என்றும் தெரிவித்தது.
No comments:
Post a Comment