புதுவையில் நடப்பது பிஜேபி ஆட்சியா? இனி சிபிஎஸ்இ பாடத்திட்டம் தானாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 31, 2022

புதுவையில் நடப்பது பிஜேபி ஆட்சியா? இனி சிபிஎஸ்இ பாடத்திட்டம் தானாம்

புதுச்சேரி, மே 31-  புதுச்சேரி, காரைக்காலில் 1 முதல் 10, 12ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 23ஆம் தேதி பள்ளி கள் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ள கல்விய மைச்சர் நமச்சிவாயம், தமிழ்நாடு பாடத் திட்டத் துக்கு பதிலாக விரைவில் சிபிஎஸ்இ பாடத் திட் டத்தை அமல்படுத்த ஆலோசிப்பதாகவும் கூறினார்.

புதுச்சேரி காமராஜர் கல்வித் துறை வளாகத்தில் அமைச்சர் நமச் சிவாயம் கல்வியாண்டு நாள்காட் டியை நேற்று (30.5.2022) வெளியிட்டார். 

பின்னர் அவர் கூறியதாவது: 

புதுச்சேரி, காரைக் கால் பகுதிகளில் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு கடந்த 5ஆம் தேதி தொடங் கிய பொதுத்தேர்வுகள் இன்றுடன் முடிவடைகி றது. விடைத்தாள் மதிப் பீட்டு பணிகள் 1ஆம் தேதி தொடங்கி நடை பெற உள்ளன. முதலமைச் சர் ரங்கசாமி அறிவுறுத் தலின்படி 2022-2023ஆம் கல்வி ஆண்டுக்கு புதுச் சேரி, காரைக்கால் பகுதி களில் 1 முதல் 10, 12ஆம் வகுப்புகளுக்கு வரும் 23ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் 17ஆம் தேதி வெளியிடப் படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. அன்று முதல் அரசுப் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு சேர்க்கை விண்ணப்பங்கள் வழங் கப்படும். புதுச்சேரியில் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம். புதுச்சேரி, காரைக்காலில் தமிழ்நாடு பாடத்திட்டத்தை பின் பற்றுகிறோம். மாஹே வில் கேரள பாடத்திட் டமும், ஏனாமில் ஆந்திர பாடத்திட்டமும் அரசு பள்ளிகளில் நடைமுறை யில் உள்ளது. புதுச்சேரி யில் முழுமையாக சிபி எஸ்இ பாடத்திட்டத்தை அமல்படுத்துவது குறித் தும் ஆலோசனை உள் ளது. சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் கீழ் சென் றால் புதுச்சேரி, காரைக் காலில் தமிழ்நாடு பாடத் திட்டத்தை பின்பற்றும் தேவை இருக்காது. பள்ளி கள் திறக்கும் நாள் முதல் மாணவர் பேருந்தை பழையபடி இயக்க திட்ட மிட்டுள்ளோம். அன் றைய தினமே பாடபுத்த கங்கள், சீருடை வழங்கப் படும். புதிதாக 70 தொடக் கப் பள்ளி ஆசிரியர்களை பள்ளி திறப்புக்குள் நிய மிப்போம். ஏற்கெனவே ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய 170 ஆசிரியர்களை நிரந்தரம் செய்துள்ளோம். பல ருக்கு ஊதியத்தை அதி கரித்துள்ளோம். மொழி ஆசிரியர்களை நியமித் துள்ளோம். நடப்பு கல்வி யாண்டில் சனிக்கிழமை பள்ளிகள் இயங்காது. பள்ளி திறப்பு தனியார் பள்ளிகளுக்கும் பொருந் தும்.

No comments:

Post a Comment