புதுடில்லி, மே 7 இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 805 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 3 ஆயிரத்து 545 மற்றும் நேற்று முன் தின பாதிப்பான 3 ஆயிரத்து 275 -அய் விட அதிகமாகும்.
இதனால், நாட்டில் கரோனா பாதிக்கபட்ட வர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 98 ஆயிரத்து 743 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பில் இருந்து 3 ஆயிரத்து 168 பேர் குணமடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment