பெங்களூரு,மே 5- கருநாடக மாநிலத் தில் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங் பரி வார அமைப்புகளின் வகுப்பு வாத வெறியாட்டங்களால் அம்மாநிலத் தில் கலவர சூழல் அதிகரித்தபடி உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர் களிடையே மதவாத நச்சு விதைக் கப்பட்டு வருகிறது. ஹிஜாப் அணி யும் இசுலாமிய மாணவிகளுக்கு எதிரான வன்முறைகள், உணவில் ஹலால் முறைக்கு எதிர்ப்பு மூலம் வகுப்புவாத கலவரங்களுக்கு தூபம் போடப்பட்டு பெருமளவில் சிறு பான்மை மக்கள் பாதிப்புக்கு உள் ளாக்கப்பட்டு வருகின்றனர். சங் பரி வாரங்களின் இந்துத்துவ வன்முறை வெறியாட்டங்களால் பன்னாட்ட ளவில் தலைகுனிவு ஏற்பட்டு வரு கின்றது.
ஒன்றிய உள்துறை அமைச்சகம் இதனை முன்னதாகவே எச்சரிக்கத் தவறியுள்ளதுடன், அதிகார ஆண வப் போக்குடன் வகுப்புவாத வன் முறைகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அவ்வப்போது ஒன்றிய பாஜக அமைச்சர்களே மொழி வெறி, மத வெறியுடன் பேசுகின்ற போக்கு அதிகரித்து வருகிறது. கரு நாடக மாநிலத்தில் அரங்கேற்றப் பட்டு வருகின்ற இந்துத்துவ வன் முறைகளைக் கட்டுப்படுத்த முனைப்பு காட்டாத நிலையிலேயே ஒன்றிய பாஜக அரசு இருந்து வருகிறது.
வகுப்புவாத வெறியாட்டங்கள்
கருநாடக மாநிலத்திலுள்ள பாஜக மேலவை உறுப்பினர் ஒரு வரே ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அனைத் தையும் கட்டுப்படுத்தி வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். அம்மாநி லத்தில் ஆர்.எஸ்.எஸ். சங் பரிவாரங் களின் வகுப்புவாத வெறியாட்டங் களுக்கு பாஜகவிலிருந்து எதிர்ப்புக் குரல் ஒலிக்கத் தொடங்கிவிட்டது.
ஆனால், உண்மையில் கலவரத் துக்கு காரணமான ஆர்.எஸ்.எஸ். சங் பரிவார அமைப்புகளின் மீது நடவடிக்கை எடுக்காமல், திசை திருப்பிட பாஜக முனைப்பு காட்டி வருகிறது.
ஆண்டுக்கொரு முதலமைச்சர் என்பதுபோன்று, கருநாடகாவில் முதலமைச்சராக இருந்த எடி யூரப்பா நீக்கப்பட்டு, கடந்த ஜூலை யில் பசவராஜ் பொம்மை முதல மைச்சராக நியமிக்கப்பட்டார்.
அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பசவராஜ் பொம்மை தலைமையில் தேர்தலை சந்தித்தால் பாஜக தோல் வியை சந்திக்க நேரிடும் என்பதால், கருநாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை விரைவில் மாற்றப்பட இருப்பதாக தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது.
ஆட்சிக்கு எதிரான
மக்களின் மனநிலை
பாஜகவின் தேசிய அமைப்பு செயலாளர் பி.எல்.சந்தோஷ் அண் மையில் கூறும்போது, “அரசியலில் மாற்றம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. ஒரு கட்சி தொடர்ந்து இரண்டாவது முறையாக தேர்த லில் வெற்றி பெறுவது எளிதான காரியம் அல்ல. ஆட்சிக்கு எதிரான மக்களின் மனநிலையை சமாளித்து வெற்றி பெற வேண்டுமென்றால், புதுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. குஜராத்திலும் டில்லி மாநகராட்சியிலும் தேர்த லுக்கு முன்பு பாஜக பெரிய மாற் றங்களை மேற்கொண்டது. அதே போல மாற்றங்கள் கருநாடகாவிலும் நிகழும்” என்றார்.
இந்நிலையில் 3.5.2022 அன்று பெங்களூருவில் ஒன்றிய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலை வருமான அமித் ஷா கருநாடக பாஜக மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதில் முதலமைச்சர் பதவியில் இருந்து பசவராஜ் பொம்மையை மாற்று வது, அமைச்சரவையை மாற்றி அமைப்பது, புதியவர்களுக்கு வாய்ப்பு அளிப்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இதுகுறித்து பாஜக மூத்த சட்ட மன்ற உறுப்பினர் பசன கவுடா யத்னால் கூறும்போது, “வரும் 10ஆம் தேதிக்குள் கருநாடக அரசி யலில் மிகப்பெரிய மாற்றம் நிகழும். இதுகுறித்து மேலிடத் தலைவர்கள் தீவிரமாக பரிசீலித்து வருகின்றனர். மக்கள் மாற்றத்தை விரும்புவதால் கட்சி மேலிடமும் அதை பரிசீலிக் கும்" என்றார்.
No comments:
Post a Comment