சென்னை, மே 2- சென்னையில் ஆதரவின்றி சுற்று வோரை மீட்கும் முயற்சி யில் ஈடுபட்டு வரும், 'காவல் கரங்கள்' திட்டம் குறித்து, விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள் ளப்பட்டது
சென்னை காவல் துறையில், சாலை ஓரங் களில் ஆதரவற்ற நிலை யில் சுற்றுவோரை மீட்டு, அவர்களின் உறவினர்களி டம் ஒப்படைக்க, 'காவல் கரங்கள்' என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வரு கிறது. இதன் வாயிலாக, சென்னை மாநகராட்சி மற்றும் தனியார் தொண்டு நிறுவனத்தாருடன் இணைந்து, சாலைகளில் ஆதரவற்ற நிலையில் சுற்றுவோரை மீட்டு, அவர்களுக்கு மருத்துவ உதவி செய்யப்படுகிறது.
அவர்களுக்கு தேவை யான உடை, உணவு உள் ளிட்ட வசதிகள் செய்து தரப்படுகின்றன. சென் னையில் மீட்கப்படும் வட மாநிலத்தவர்கள், அவர்களின் சொந்த ஊர் களில், உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகின்ற னர்.
இந்நிலையில், காவல் கரங்கள் திட்டம் குறித்து, சென்னை பெசன்ட் நகர் கடற்கரை அருகே, சென்னை காவல்துறை யின் தலைமையிடத்து கூடுதல் காவல்துறை ஆணையர் லோகநாதன், விழிப்புணர்வு நடைபயிற்சியை கொடியசைத்து துவக்கினார். துண்டு பிர சுரங்கள் வாயிலாகவும் பொதுமக்களிடம் விழிப் புணர்வு ஏற்படுத்தப்பட் டது என்பது குறிப்பிடத் தக்கது.
No comments:
Post a Comment