புதுக்கோட்டை, மே 31- புதுக்கோட்டை மாவட்டத்தில் மூட நம்பிக்கை ஒழிப்பு, அறிவியல் பரப்புரைக் கூட்டங்களை ஜூன் 12இல் விராலிமலையில் தொடங்கி வைக்க வருகை தரும் தமிழர் தலைவர் அவர்களுக்கு நன்றியும், சிறப்பான வரவேற்பும் வழங்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
29.5.2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில் புதுக்கோட்டை மாவட்டத் திராவிடர் கழக அலுவலகத்தில் மாவட்ட கழக நிர்வாகிகள் கூட்டம், புதுக்கோட்டை மாவட்டக் கழக தலைவர் முனைவர் மு.அறிவொளி தலை மையில் நடைபெற்றது. திராவிடர் கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார். மாவட்ட செயலாளர் ப.வீரப்பன், மாநில மாண வர் கழக துணைச் செயலாளர் இரா.செநதூர பாண்டியன், பகுத்தறிவாளர் கழக மாநிலத் துணைத் தலைவர் அ.சரவணன், மாவட்ட அமைப்பாளர் ஆ.சுப்பையா, மாவட்டத் துணைத் தலைவா செ.இராசேந்திரன், நகர இளைஞரணித் தலைவர் பூ.சி. அரஸ் இளங்கோ, மாணவர் கழகம் இரா.கபிலன் ஆகியோர் கலந்து கொண்டனர். கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. மூடநம்பிக்கை ஒழிப்பு, அறிவியல் பரப்புரைக் கூட்டங்களைத் தொடங்கிவைக்க விராலி மலைக்கு வருகை தர ஒப்புதல் வழங்கிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களுக்கு மாவட்ட திராவிடர் கழகம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
2. ஜூன் 12இல் விராலி மலைக்கு வருகை தரும் தமிழர் தலைவர் அவர்களுக்கு மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் சிறப்பான வரவேற்பளிப்பது எனத் தீர்மானிக்கப் படுகிறது.
3. 12.6.2022 அன்று விராலிமலையில் நடைபெறும் தொடக்க விழாவினைத் தொடர்ந்து பொன்னமராவதி, திருமயம், புதுக்கோட்டை, குன்றண்டார்கோயில், அன்ன வாசல், விராலிமலை ஆகிய ஒன்றியங்களில் மூடநம்பிக்கை ஒழிப்பு அறிவியல் பரப்புரைக் கூட்டங்களை நடத்துவது எனத் தீர்மானிக்கப்படுகிறது..
No comments:
Post a Comment