நகரங்கள் - கிராமங்கள் என்ற பேதம் இருக்கக்கூடாது; ஒரே அமைப்பு என்பதுதான் முக்கியம்
21 மொழிகளில் பெரியார்
ஏன்? தொடர் 2: தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
சென்னை, மே
3 ''நகரங்கள், கிராமங்கள் என்ற பேதம் இருக்கக்கூடாது;
ஒரே அமைப்பு என்பதுதான் முக்கியம். இதனை அரசு செய்தாலே, நல்ல திட்டமாக இருக்கும்''என
கிராம சீர்திருத்தத்தில், அய்யா பெரியார் சொல்லி யிருக்கிறார் என்று திராவிடர்
கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விளக்க வுரையாற்றினார்.
21 மொழிகளில் பெரியார் - ஏன்? சிறப்புக் கூட்டம்
கடந்த
28.3.2022 அன்று மாலை காணொலிமூலம் ‘‘21 மொழிகளில் பெரியார் - ஏன்?’’ என்ற தலைப்பில்
நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
அவர்கள் சிறப்புரையாற்றினார்.
நேற்று வெளிவந்த
சிறப்புரையின் தொடர்ச்சி வருமாறு:
இன்றைக்கு அவருடைய
கருத்துகள், வெளிநாட்டில் சட்டமானது.
இறுதியாக ஒன்றைச்
சொல்கிறேன்.
ஒரு சாதாரணக் கூட்டம்
- ஈரோட்டில் தோழர் சண் முகராயன் - கிராம அதிகாரிகளுக்குப் பயிற்சி கொடுக் கிறார்கள்.
இந்நிகழ்ச்சி 1944 ஆம் ஆண்டில் நடை பெற்றது.
‘‘கிராம
சீர்திருத்தம்‘‘
பெரியார், ஈரோட்டில்
தங்கியிருக்கும்பொழுது, அவரிடம் சென்று, அய்யா கிராம அதிகாரிகள் பயிற்சி நிறைவு விழாவில்
நீங்கள் பங்கேற்கவேண்டும்; டெபுடி கலெக்டர் வருகிறார் என்கிறார்கள்.
அய்யா அந்த விழாவில்
கலந்துகொள்கிறார். ‘‘கிராம சீர்திருத்தம்‘‘ என்ற தலைப்பு கொடுத்தார்கள். அந்த விழாவில்
அய்யா பேசிய உரை, ஒரு சிறிய புத்தகமாக வெளிவந்தது.
கிராம சீர்திருத்தத்தில்
அய்யா பேசிய கருத்துகளே - 1995 ஆம் ஆண்டுகளில் நடைமுறைக்கு வந்தது.
குடியரசுத் தலைவராக
இருந்த அப்துல்கலாம் அவர்கள், இன்றைய இளைஞர்களுக்கு எடுத்துக்காட் டானவர். நல்ல சிந்தனையாளர்.
அவர் ஒரு திட்டம் வகுத்தார். அந்தத் திட்டத்திற்குப்
பெயர் ‘புரா’
என்று வைத்தார்.
‘PURA’ - Providing Urban Amenities to Rural Areas
நகரங்களில் என்னென்ன
வசதி வாய்ப்புகள் இருக் கிறதோ, அவை அத்தனையும் கிராமங்களில் இருக்க வேண்டும் என்பதுதான்
அதனுடைய குறிக்கோள். இதைச் செய்தால் நாட்டில் பேதம் இருக்காது.
1944-களில் தந்தை
பெரியார் உரையாற்றும்பொழுது சொல்கிறார்,
கிராமங்கள் நவீன வருணாசிரம தர்மம்
‘‘கிராமத்தை
சீர்திருத்துவதில் எனக்கு நம் பிக்கையில்லை. அதற்குப் பதிலாக கிராமங்களே ஒழிய வேண்டும்.
இது ஒரு நவீன வருணாசிரம தர்மம்.
கிராமத்துக்காரன்
உழைப்பில், நகரத்துக்காரன் கொழுத்துக் கொண்டிருக்கின்றான்.
கிராமத்துக்காரன்
உழைத்துவிட்டு, ஒரு பலனும் அனுபவிக்காமல் இருக்கிறான். நகரத்துக்காரன் ஒரு வேலையும்
செய்யாமல், வசதியாக இருக் கிறான்.
இந்தப் பேதம் கூடாது.’’
பேதம் கூடாது என்று
சொல்லும்பொழுது, மனிதர்களுக்குள்ளே இருக்கின்ற பேதம் மட்டு மல்ல; ஆண் - பெண் பேதம்
மட்டுமல்ல; நகரம் - கிராமம் என்ற பேதமும் கூடாது.
எவ்வளவு பரந்த
தத்துவம். எவ்வளவு சிறப்பானது.
அதை நடைமுறைப்படுத்தக்கூடிய
ஒரு திட்டமாக அறிவித்தார் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம்.
‘‘அக்னி
சிறகுகள்’’
என்ற கலாம் எழுதிய புத்தகம் இருக்கிறது. அதில் அவருடைய கருத்துகளை சொல்லி யிருக்கிறார்.
அதில் புரா என்கிற சிந்தனையை உண்டாக்குகிறார் அப்துல்கலாம்.
அவரை, நாங்கள்
பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்திற்கு அழைத்தோம்.
வளாகத்தில் உள்ள
கல்வி நிறுவனங்களையெல்லாம் பார்த்தார்.
அய்யா,
Providing Urban Amenities to Rural Areas
முழுவதும் வைத்திருக்கிறீர்கள்.
இந்தத் தத்துவத்தை, பெரியார் அறக்கட்டளை, மணியம்மையார் அறக்கட் டளை சார்பாக, பெரியார்
மணியம்மை பல்கலைக் கழகம் சுற்றுவட்டாரத்தில் உள்ள 66 கிராமங்களைத் தத்தெடுத்து, அதில்
பெரியாருடைய சிந்தனைகளை நடைமுறைப்படுத்துகிறோம்.
நீங்கள் சொல்கிற
கருத்தை, 1944 ஆம் ஆண்டு களிலேயே தந்தை பெரியார் சொல்லியிருக்கிறார். அதுதான் கிராம
சீர்திருத்தம் என்று சொல்லி, அந்தப் புத்தகத்தைக் கொடுத்தோம்.
அப்படியா? என்று
ஆச்சரியப்பட்டார்.
அதற்குப் பிறகு
அவர் குடியரசுத் தலைவராக இருக்கும்பொழுது, டில்லியிலிருந்து அதிகாரிகளை யெல்லாம் அழைத்து
வந்திருந்தார்.
அவர்களிடம்,
‘‘நான்தான் இதை முதலில் சொன் னேன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்; பெரியார் அப்பொழுதே
சொல்லியிருக்கிறார். எப்பேர்ப்பட்ட சிந்தனையாளர் அவர்!
நான், பெரியாரை
மாணவப் பருவத்தில் சந்தித்தி ருக்கின்றேன். நாகப்பட்டினத்தில் படித்துக் கொண் டிருந்தபொழுது,
பெரியாரை சந்தித்தேன்.
அப்பொழுது என்னை
அன்பாக விசாரித்தார் தந்தை பெரியார்.
‘‘நீ
என்னவாகப் போகிறாய்?’’ என்று பெரியார் கேட்டார்.
அரசியலுக்குப்
போகவேண்டும் என்று விரும்பு கிறேன் என்று சொன்னவுடன்,
படிக்கின்ற காலத்தில்
வேண்டாம்; படித்து முடித்து போ என்றார்.
பெரியார் சொன்ன
அறிவுரையை நான் கேட்டேன்’’ என்றார்.
‘பெரியார்
புரா’
‘பெரியார்
புரா’
என்று அவருடைய திட்டத்திற்குப் பெயர் வைத்தார்.
கடைசியாக அவர்
மறைவதற்கு முன்பு எழுதிய புத்தகம்
அதாவது உலகத்தில்
ஏன் வறுமை இருக்கவேண்டும்?
கிராமங்களில்தானே
வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை இருக்கிறது.
கிராமப் பகுதிகளில்தான்
100 நாள் வேலைத் திட்டம் என்பதெல்லாம் இருக்கிறது.
பெரியாருடைய பொருளாதார
சிந்தனைகளைப்பற்றி தனியே கூட்டம் போட்டு பேசவேண்டிய விஷயமாகும். அவ்வளவு ஆழமானது.
பெரியாருடைய பொருளாதார
சிந்தனை - கல்விச் சிந்தனை ஒவ்வொன்றையும் தனித்தனியாகப் பேச வேண்டும்.
மாணவர்களிடம்,
ஆசிரியர்கள் கேள்வி கேட்கும் முறை- தேர்வு முறை சரியானது அல்ல என்றார் பெரியார்.
உண்மையான கல்வி
முறை
எப்படி இருக்கவேண்டும்
உண்மையான கல்வி
முறை எப்படி இருக்கவேண்டும் என்றால், ஆசிரியர், வகுப்பறையில் அமர்ந்தவுடன், மாணவர்கள்
கேள்வி கேட்கவேண்டும்.
ஆசிரியர் அதற்குப்
பதில் சொல்லவேண்டும். அது தான் மாணவர்களின் சிந்தனையை வளர்க்கும் என்றார். எப்பொழுது
தெரியுமா? 1926 ஆம் ஆண்டு.
‘‘பகுத்தறிவுச்
சுடரேந்துவீர்!’’
‘‘பகுத்தறிவுச்
சுடரேந்துவீர்!’’ என்ற தலைப்பில் சிறிய புத்தகத்தை வெளியிட்டு இருக்கிறோம்.
ஆக, அய்யாவினுடைய
சிந்தனை ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருக்கும்.
உயர் எண்ணங்கள்
மலரும் சோலை-
ஆயிரம் ஆண்டெனும்
மூதாட்டி
அவள் அணிந்திராத
அணியாவார்
அறிந்திராத அறிவாவார்
உயர் எண்ணங்கள்
மலரும் சோலை
மண்டைச் சுரப்பை
உலகு தொழும்.
இவை அத்தனைக்கும்
நியாயங்கள் இருக்கின்றன.
இவை அத்தனையும்
வெறும் அலங்காரச் சொற் களோ அல்லது ஆடம்பரச் சொற்களோ - புகழுரைகளோ அல்ல - அவையெல்லாம்
உண்மை உரைகள்.
Target 3 Billion:
அதில்,
Target 3 Billion: Innovative Solutions Towards Sustainable Development - APJ Abdul Kalam
10 ஆண்டுகளுக்கு
முன்பாக வெளிவந்த புத்தகம். பெரியார் புராவைப்பற்றி இந்தப் புத்தகத்தில் எழுதி யிருக்கிறார்.
பெரியார் மணியம்மை
பல்கலைக் கழகம் இதனைச் சிறப்பாக செய்திருக்கிறது என்பதை எடுத்துச் சொல் லியிருக்கிறார்.
ஜப்பான் நாட்டோடு
இணைந்து வித்தியாசமாக செய்திருக்கிறார்கள் இந்தப் பல்கலைக் கழகத்தினர் என்று வியந்து
பாராட்டினார்.
அப்பொழுதெல்லாம்
விளம்பரம் கிடையாது.
பல பேர் காலணா
வேலை செய்துவிட்டு, நாலணா விற்கு மேல் விளம்பரம் தேடுகிறார்கள்.
நாங்கள் நாலணா
அல்ல - நான்கு ரூபாய்க்கு வேலை செய்துவிட்டு, விளம்பரம் தேடாமல் இருக்கின்றோம்.
பெரியாருடைய கருத்துகள்
என்று வரும்பொழுது, அந்தப் புத்தகத்தில் நிறைய பக்கங்களில் எழுதி யிருக்கிறார் அப்துல்கலாம்
அவர்கள்.
உலகத்தின் வறுமையைப்
போக்கவேண்டுமானால், ‘புரா’ திட்டம், நகர்ப்புறங்களில் என்னென்ன வசதிகள்
இருக்கிறதோ, அந்த வசதிகள் கிராமங்களிலும் இருக்க வேண்டும்.
பெரியார் நளினமாக
சொல்லமாட்டார்; புல்டோசர் போன்று அடித்து சொல்வார்.
நகரங்கள், கிராமங்கள்
என்ற பேதம் இருக்கக்கூடாது; ஒரே அமைப்பு என்பதுதான் முக்கியம்.
இதனை அரசு செய்தாலே,
நல்ல திட்டமாக இருக்கும்.
கிராம சீர்திருத்தத்தில்,
அய்யா பெரியார் சொல்லி யிருக்கிறார்.
அவர் என்ன கருத்தை
சொன்னாரோ, அதே கருத்தை, பொருளாதார அளவுகோலை வைத்து, அதற்கு வார்த்தைகளை வைத்து, ஒரு
விஞ்ஞானியாக இருக்கக்கூடிய அப்துல்கலாம் அவர்கள் சொன்னார்கள்.
எலெக்ட்ரானிக்
கனெக்டிவிட்டி
எகனாமிக் கனெக்டிவிட்டி
எஜுகேசனல் கனெக்டிவிட்டி
இப்படி ஒவ்வொரு
தொடர்புகள்.
இவை அத்தனையும்
செய்யவேண்டும். கிராமங் களில் இவை அத்தனையும் இருக்கவேண்டும்.
கிராமத்திற்கென்று
நல்ல பாதைகள், நல்ல விற்பனை மய்யங்கள் இருக்கவேண்டும். எல்லா இடங்களிலும் சேமிப்புக்
கிடங்குகள் இருக்கவேண்டும்.
அதன்மூலமாகத்தான்
உலகத்தில் இருக்கக்கூடிய வறுமையைப் போக்க முடியும் என்று சொன்னார்.
இனிவரும் உலகம்
கிராம சீர்திருத்தம்
பெண் ஏன் அடிமையானாள்?
பெண்ணுக்கு சுதந்திரம்
சமூகநீதி
சுயமரியாதை
இவை அத்தனையும்
சொன்னார்.
நேற்று உங்களுக்கு
சொன்னேன் - அதையே இன்றும் கூறி உரையை முடிக்கின்றேன்.
''சுயமரியாதையைத்
தேட வேண்டியது
அவசியம்''
அமெரிக்காவில்
இருக்கக்கூடிய பேராசிரியர்கள், சிந்தனையாளர்கள், மருத்துவர்கள் The Search for Self-Respect - என்ற தலைப்பில்
புத்தகம் எழுதியது சுயமரி யாதை மனிதனுக்கு.
அமெரிக்காவில்
நியூயார்க்கில் உள்ள பிரபல பிளாஸ்டிக் சர்ஜன் Maxwell Maltz M.D. என்பவர் ஒரு நூல் எழுதி, ‘‘சுயமரியாதையைத்
தேட வேண்டியது அவசியம்‘‘ என்பதை விவரிக்கிறார். இவர் ஒரு விஞ்ஞானி
- சுமார் 100 ஆண்டுகளுக்குமுன் தந்தை பெரியார் தான் தொடங்கிய இயக்கத்திற்கு வைத்த பெயர்
‘‘சுயமரியாதை இயக்கம்‘‘ (Self-Respect Movement) மனித குலத்தையே மய்யப்படுத்தும் சொல்லாக இன்று
ஆகிவிட்டது. பெரியார் 100 ஆண்டுகளுக்கு முன் சொன்னதை, அமெரிக்க விஞ்ஞானிகள் இன்று சொல்கிறார்கள்
என்பது வியப்பிலும் வியப்பு அல்லவா?
மனித குலத்தினுடைய
ஒற்றுமை ஓங்கவேண்டும்
பேதமற்ற பெருவாழ்வு
வாழவேண்டும்
அனைவருக்கும் அனைத்தும்
கிடைக்கவேண்டும் என்றால்,
இந்தக் கருத்துகள்
உலகளாவிய கருத்தாக செல்ல வேண்டும் என்பதுதான் அதனுடைய அடிப்படை.
ஆகவேதான், 21 மொழிகளில்
இந்தக் கருத்துகள் சென்றால், இந்த நாட்டிற்குப் பெருமை.
இப்படி ஒரு தலைவர்
- அந்த மண்ணிலே கிடைத்திருக்கிறார் என்று எல்லோரும் பாராட்டுவதோடு மட்டுமல்ல, பயனாளிகளும்
ஆவார்கள்.
பெரியாரால் பயன்பெற்றோம்
பெரியாரால் வாழ்கிறோம்
நாம்!
அதுதான் தமிழ்நாடு
பட்ஜெட் உரையில் அரு மையாகக் குறிப்பிடப்பட்டு இருக்கிற ஒரு சொல்.
பயன்பெறக்கூடியவர்களாவார்கள்.
ஏனென்றால், பெரியாரால்
பயன்பெற்றோம்
பெரியாரால் வாழ்கிறோம்
நாம்!
அந்த உணர்வு நமக்கு
இருக்கிறது.
பெரியாரால் அறிவு
பெற்றோம்
பெரியாரால் மானம்
பெற்றோம்
மானமும் அறிவும்
மனிதர்க்கு அழகு
பெரியாரால் ஆளுமை
பெற்றோம்
பெரியாரால் தன்னம்பிக்கை
பெற்றோம்
தன்னம்பிக்கையின்
காரணமாக தளராது தலை நிமிரக்கூடிய வாய்ப்பைப் பெற்றோம் என்று சொல்லக் கூடிய அளவிற்கு,
ஒவ்வொரு மக்களும், குடிமக்கள் அவர் எந்த நாட்டவர்? எந்த இனத்தவர்? என்பதைவிட
‘‘யாதும்
ஊரே, யாவரும் கேளிர்
பிறப்பொக்கும்
எல்லா உயிர்க்கும்‘‘
எல்லா உயிர்க்கும்
என்பதுதான் முக்கியம்.
பெரியாருடைய சிந்தனை
மனித குல சிந்தனை.
‘‘அனைத்துயிர்
ஒன்றென் றெண்ணி
அரும்பசி எவர்க்கும்
ஆற்றி
மனத்தினுள் பேதாபேதம்
வஞ்சகம் பொய் களவு
சூது
சினத்தையும் தவிர்ப்பாயாகில்
செய்தவம் வேறொன்
றுண்டோ
உனக்கு இது உறுதியான
உபதேசம் ஆகும்
தானே?’’
பெரியாருடைய பார்வை
மனிதகுல பார்வை - மானுட வளர்ச்சிப் பார்வை
எனவே, பெரியாருடைய
பார்வை மனிதகுல பார்வை - மானுட வளர்ச்சிப் பார்வை.
மானுடம் முன்னேறவேண்டும்
என்ற பார்வை.
அறிவுப் பற்று
- வளர்ச்சிப் பற்று
இவைதான் மிக முக்கியம்.
மனிதகுலம் தழைக்க
பெரியார் என்ற மாமருந்து
பெரியார் என்ற
மனிதநேயர்
பெரியார் என்ற
மானுடத் தத்துவம்
பெரியார் என்ற
கலங்கரை வெளிச்சம்
பெரியார் என்றும்
வழிகாட்டக் கூடியது
எல்லாவற்றிற்கும்
மேலாக,
பெரியார் என்ற
போராயுதம்,
பேராயுதம் தேவை.
அதற்காக தக்க அறிவிப்புகளை
செய்திருக்கின்ற நம்முடைய அரசுக்கு, எத்தனை முறை வேண்டுமா னாலும், வணக்கங்களையும்,
நன்றிகளையும் குவிக்க வேண்டும் நாம்.
உலகத்தை உய்விக்க
திராவிடத் தத்துவம்
பயன்படும்
அதன்மூலம் உலகளாவிய
அளவிற்குப் பெரியாரை கொண்டு செல்வதோடு மட்டுமல்ல,
பெரியாரை உலகமயமாக்குவது
உலகத்தை பெரியார்
மயமாக்குவது
உலகத்தை உய்விக்க
திராவிடத் தத்துவம் பயன்படும்
அதற்கு இதோ எங்களிடத்திலே
-
நாங்கள் மட்டும்
பயன்படக்கூடாது -
யாம் பெற்ற இன்பம்
பெறுக இவ்வையகமே
என்பதற்கு அதுதான் ஒரே வழி - சரியான வழி!
செய்த முதலமைச்சருக்கும்,
ஆட்சிக்கும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்!
செய்யத் துணை நிற்போம்!
வாரீர்! வாரீர்!
வாழ்க பெரியார்!
வளர்க பகுத்தறிவு!!
வெல்க திராவிடம்!
நன்றி, வணக்கம்!
இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை யாற்றினார்.
No comments:
Post a Comment