மிக மெல்லிய அளவில் மின்சாரத்தைப் பாய்ச்சினால், ஆறாத புண்களும் கூட விரைவில் ஆறிவிடும் என்பது ஏற்கனவே அறியப்பட்ட அறிவியல் உண்மை.ஆனால் இதை முதல் முறையாக நடைமுறைப்படுத்த முயற்சித்திருக்கிறது 'இ-பேட்ச்'. காயங்களின் மீது ஒட்டும் 'பிளாஸ்திரி' போல இ-பேட்ச் வடிவமைக்கப்பட்டுள்ளது. லாஸ் ஏஞ்சலஸ் நகரிலுள்ள டெராசாகி இன்ஸ்டிடியூட் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ள இந்த பிளாஸ்திரி, கடற்பாசி மூலம் தயாரிக்கப்பட்டது. இது தோல் மீது பட்டால் பாதிப்பு இருக்காது.இதன்மீது, வெள்ளிக் கம்பிகளால் ஆன சர்க்கியூட் ஒன்று பதிக்கப்பட்டுள்ளது. இந்தக் கம்பியின் ஊடாக ஒரு மின் கலனிலிருந்து அவ்வப்போது மெல்லிய மின் துடிப்புகளை செலுத்தியபோது, 20 நாட்களில் குணமாகும் காயங்கள், 7 நாட்களில், அதிக தழும்பு இல்லாமல் குணமாயின. ஆய்வக எலிகள் மீதுதான் சோதனை நடத்தப்பட்டது என்றாலும், மனிதர்களுக்கும் இதே பலன் தரும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.தவிர, வெள்ளிக் கம்பிகள், காயங்கள் மீது கிருமிகள் அண்டாமல் காப்பாற்றின. விரைவில் இ-பேட்ச் சந்தைக்கு வந்தால், சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் புண்களை விரைவில் குணப்படுத்த உதவும்.
Thursday, May 5, 2022
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment