பெரியார் பிஞ்சு பழகுமுகாம் (22.5.2022 முதல் 26-5-2022 வரை) பற்றி இணைய வெளியில் ஹிஜிuதீமீஇல் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. ஆசிரியர் அவர்கள் குழந்தைகளுடன் ஆர்வமுடன் உரை யாடியது மிக நன்றாக இருந்தது. குழந்தைகளுக்கு கையில் கயிறு கட்டும் மூடநம்பிக்கை பழக்கங் களையும், கயிற்றில் உள்ள கிருமிகள் பற்றியும் விஞ்ஞானமுறையில் விளக்கிச் சொன்னது அருமையாக இருந்தது. விஞ்ஞானி அய்சக் நியூட்டன் எப்படி சிறுவயதில் "ஆப்பிள் ஏன் கீழே விழுந்தது, மேலே போகாமல்" என்று கேள்வி கேட்டு புவி ஈர்ப்பு விசையை எப்படி கண்டு பிடித்தார் என்பதை விளக்கி பிஞ்சுகள் மனதில் எதையும் ஏன் எப்படி என்று கேள்வி கேட்கும் மனப்பான்மையை விதைத்த பாங்கு குழந்தைகளை கவர்ந்திருக்கும் என்பதில் அய்ய்யமில்லை.
பிறகு குழந்தைகளிடம் பெரியார் திரைப்படத்தில் எந்தக் காட்சிகள் பிடித்தது, ஏன் பிடித்தது என்று விளக்கமாக கேட்டு அவர்களுக்கு தன்னம்பிக்கை வளர வழிகாட்டினார். பழகுமுகாமில் உணவு,பயிற்சி முறைகள், எப்படி இருந்தது என்று குழந்தைகளிடம் கேட்டு விட்டு, என்ன பிடிக்கவில்லை எனவும் கேட்டார். பாடங்கள் பிடித்தது, காலையில் 5 மணிக்கு எழுந்திருப்பது பிடிக்கவில்லை என்று பெருவாரி யான குழந்தைகள் சொல்வதை கேட்டுவிட்டு, அதி காலையில் எழுவதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி கனிவாக எடுத்துச்சொன்னார். கற்றுக்கொண்ட வாழ்க்கைப்பாடங்களை அவரவர் வாழ்க்கையில் பயன்படுத்த ஊக்கம் அளித்தார். 5 நாள்கள் இனிமை யாக பழகு முகாமில் தங்கிவிட்டு வீட்டுக்குச்செல்ல தயங்குவதாக சில குழந்தைகள் தெரிவித்தபோது பகுத்தறிவு குழந்தைகள் சமூகநீதி விதைகளாக பரிணமித்துவிட்டது தெரிந்தது. ஆசிரியர் அய்யா வுக்கும், பழகுமுகாம் நடத்திய அனைத்து திராவிடர் கழக நண்பர்களுக்கும், உங்கள் உழைப்புக்கும், கலந்து கொண்ட குழந்தைகளுக்கும் அவர்கள்
பெற்றோர்களுக்கும் zoom technologyக்கும் மிக்க நன்றி!
வாழ்க பெரியார், வளர்க பகுத்தறிவு!
- சரோ இளங்கோவன்
அமெரிக்கா
No comments:
Post a Comment