சென்னை, மே 2- இலங்கை மக்களுக்கு தமிழ்நாட்டின் சார்பில் அரிசி, மருந்து, பால் பவுடர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அனுப்ப அனுமதியளித்து, முதல மைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஒன் றிய அமைச்சர் ஜெய்சங்கர் கடிதம் அனுப்பியுள்ளார்.
இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால், தவிக்கும் மக்களுக்கு உதவிடும் வகையில் முதல்கட்டமாக அரிசி, மருந்து, பால்பவுடர் என ரூ.123 கோடிக்கு அத்தியாவசியப் பொருட் களை இலங்கைக்கு அனுப்ப அனு மதியளிக்கக் கோரி அரசினர் தீர் மானம் சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாட்டின் இலங்கைக்கான உதவிக்கு அனுமதி யளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலி னுக்கு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் எழு திய கடிதம்:
இலங்கை மக்களுக்கு தமிழ்நாடு அரசின் மனிதாபிமான உதவிகள் குறித்து நாங்கள் இலங்கை அரசை கொழும்புவில் உள்ள இந்திய தூத ரகம் வாயிலாக தொடர்பு கொண் டபோது நாடுகளுக்கு இடையிலான உதவிகள் அடிப்படையில் நிவாரணத்தை பெற்றுக்கொள்ள சம்மதித்தது. இதையடுத்து, நிவார ணப் பொருட்கள் குறித்த விரவங் களை ஒன்றிய அரசுக்கு தெரிவிக் கும்படி கடந்தஏப்ரல் 29ஆம் தேதி தமிழ்நாடு அதிகாரிகளுக்கு அறி வுறுத்தப்பட் டுள்ளது.
எனவே, தாங்கள் தலைமைச் செயலருக்கு அறிவுறுத்தி, ஒன்றிய அரசுடன் இணைந்து இலங்கை மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களை அனுப்ப நடவ டிக்கை எடுக்க வேண்டும்.
-இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment