டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
மத்தியப் பிரதேசத்தில் 2 பழங்குடியினர் மீது, பசுவை அடித்துக் கொன்றதாகக் குற்றம் சாட்டி, அவர்கள் இரு வரையும் 20 பேர் கொண்ட பசு பாதுகாப்பு குழுவினர் என்ற பெயரில், அடித்து கொன்ற கொடூர சம்பவம் அரங் கேறி உள்ளது.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்காக சங்கங்கள் வழக்கு தொடர முடியாது, சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
கரோனா தடைக்கு பிறகு கேரளாவில் பொதுவாக செயல்படத் தொடங்கிய சுற்றுலாத் துறை "அதிகமான விமானக் கட்டணங்கள்" காரணமாக பெரும் சவால்களை எதிர்கொள்கிறது. இதனால் விமானங்களின் கட்டணங் களை குறைக்கத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கேரளா முதல் - அமைச்சர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார் .
பல்வேறு மொழிகள் கொண்ட நாட்டில், ஒரு மொழியை ஆங்கிலத்துக்கு மாற்றாக செயல்படுத்துவது சரியல்ல என்கிறது தலையங்க செய்தி.
மருத்துவக்கல்லூரியில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுத்துக்கொண்ட அனைத்து மருத்துவக்கல்லூரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவக்கல்லூரி இயக்குநர் நாராயண பாபு கூறியுள்ளார்.
தி டெலிகிராப்:
உலக பத்திரிக்கை சுதந்திர குறியீட்டில் இந்தியா கடந்த ஆண்டு 142ஆவது இடத்தில் இருந்து 8 இடங்கள் பின்தங்கி 150ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் முன் உள்ள முக்கிய பணி, ஓய்வு பெறப் போகும் நீதிபதி நியமனங்கள் செய்யப் படாவிட்டால், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 26 நீதிபதிகளாக வெகுவாகக் குறையும்.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment