பேரறிவாளன் வழக்கு: உச்சநீதிமன்றத்தின் நியாயமான கேள்வி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 4, 2022

பேரறிவாளன் வழக்கு: உச்சநீதிமன்றத்தின் நியாயமான கேள்வி!

தமிழர் தலைவர் அறிக்கை

பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றம் நியாய மான கேள்விகளை கேட்டுள்ளது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.

இன்னுமா சுவரெழுத்துக்களை தமிழ்நாடு ஆளுநர் படிக்கத் தவறுகிறார்?

பேரறிவாளனை ஏன் விடுதலை செய்யக்கூடாது என்று பகிரங்கமாகவே உச்சநீதிமன்றம் கேட்டது மட்டுமல்லாமல், 

'30 ஆண்டுகளுக்குமேல் சிறையில் உள்ள பேரறி வாளனின் நன்னடத்தை, உடல்நிலை இவற்றை யெல்லாம் மனிதநேயத்தோடு பார்க்கும்பொழுது, பேரறிவாளனை விடுதலை செய்வதற்கு ஏன் கால தாமதம்? இதில் விரைந்து முடிவெடுக்கவில்லை என்றால், நாங்களே முடிவெடுத்துக் கொள்ளலாம். 

முடிவெடுக்கும் பிரச்சினையில் ஒன்றிய அரசு ஏன் தலையிடுகிறது' என்று உச்சநீதிமன்ற நீதிபதி பளிச் சென்று கேட்டிருக்கிறார்.

இதைவிட மிக ஆணித்தரமான கேள்விகளை, உச்ச நீதிமன்றம்  இதுவரையில் எந்த வழக்கிலும் கேட்ட தில்லை.

'ஆளுநருக்கு அனுப்பி வைத்த ஆவணம் எங்கே?

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஒன்றிய அரசு  ஏன் அக்கறை காட்டவில்லை' என்று நீதிபதி களுடைய அதிருப்தியும் இதில் குறிப்பிடத்தகுந்ததாகும்.

ஒவ்வொரு முறையும் ஆளுநர் ஏதாவது விளக்கம் கேட்டு, முடிவெடுக்கத் தாமதிக்கிறார் என்ற 

கருத்தையும், உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேட்டு 

இருக்கிறார்கள்.

இதன்மூலமாக ஒன்றிய அரசு, ஆளுநர் இருவரு டைய நிலைப்பாடும் அம்பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.

இந்த சூழ்நிலையில், இதற்குப் பிறகும் என்ன செய்யப் போகிறார்கள் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.

இல்லையானால், உச்சநீதிமன்றமே இதற்குரிய தீர்வை, விரைவில் அளிப்போம் என்று அறிவித் திருப்பதை, உளப்பூர்வமாக கோடான கோடி தமிழர்கள், நியாயவாதிகள் சார்பில் வரவேற்கிறோம்.

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

4.5.2022


No comments:

Post a Comment