நீட் எதிர்ப்பு பரப்புரைப்பயணம் முடிந்த இரண்டொரு நாளில் இந்தி எழுத்து அழிப்பு போராட்டத்திற்கு புறப்பட்ட தடந்தோள் வீர! வணக்கம்.
2.5.2022 நாளிட்ட விடுதலை இதழில் "அடைமொழி தவிர்த்து பெயர் சூட்டுவது நல்லது" என்ற தங்கள் அறிக்கை நிலையாணையாக (Standing Order) அரசு நினைவில் கொள்ளத் தக்கது. எந்த பெயரையும் சுருக்குவது என்பது நெருக்கி அணைத்து அழிப்பதற்கு ஒப்பாகும்.இதுவும் பார்ப்பனக் கலாச்சாரம் என்பதற்கு விக்கி, விச்சு, கோக்கி, பாச்சு என்று அக்கிரகாரத்தில் அழைப்பதை எடுத்துக்காட்டலாம்.
காலம்தோறும் நிலைத்திருக்க தலைவர்கள் பெயர்களை நிறுவனத்திற்கோ சாலைக்கோ சூட் டினால் அந்தப்பெயரை" டி.நகர்" என்றும் "கே.கே.நகர் "என்றும் சுருக்கி சிதைத்துவிடுகிறார்கள்.
அந்த மாதிரி 'அண்ணா பல்கலைக்கழகம் 'என்று கலைஞர் அவர்கள் பெயர் சூட்டியபோது, அறிஞர் அண்ணா பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டினால் என்ன என்று வினவியபோது - கலைஞர் "ஏன்ஏ.ஏ.யூனிவர்சிடி என்று சுருக்கி விடுவதற்கா?" என்று பதிலிறுத்தாராம்.
நேரு அவர்கள் பெயர் விளங்க ஜவகர் லால்நேரு போஸ்ட் கிராஜுவேட் மெடிகல் எஜுகேஷன் அன்ட் ரிசர்ச் என்று புதுச்சேரி மருத்துவக்கல்லூரிக்கு பெயர் வைத்தால்' ஜிப்மெர் 'என்று முதல் எழுத்தைச்சுருக்கி புதுப்பெயர் கண்டு நேரு பெயரை அழித்தனர்.
காரைக்கால் பக்கம் சென்றால் பேருந்தில் 'பஜன்கோ' என்று உச்சரிக்கப்படுவதைக் கேட்கலாம்.ஏதேனும் பஜனை மடத்தின் பெயரா என்று வினவினால் 'பண்டித ஜவகர்லால் நேரு அக்ரிகல்சுரல் காலேஜ்' (ப.ஜ.ன்.கோ)என்ற பெயரை அப்படி சுருக்கி இருக்கிறார்களாம்.
பஜனை, கடவுள் இவற்றில் நம்பிக்கை இல்லாத வர் நேரு! அவரையே பஜனை யாக்கிவிட்டார்கள்! நேரு காலேஜ் ஆஃப் அக்ரிகல்சர் என்று பெயர் வைத்திருந்தால் 'நேரு காலேஜ்' என்று அழைத்து நேரு பெயரை விளங்கச்செய்திருப்பார்கள்.
ஆசிரியரின் அறிவுரை பகுத்தறிவின், இயற் கையின், இயல்பின் பாற்பட்டது !
- அழகிரிசாமி, செம்பனார்கோயில்
No comments:
Post a Comment