வல்லம், மே 3 பெரியார் மணி யம்மை நிகர்நிலை பல்கலைக்கழகம் மற்றும் கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கான இந்திய தேசிய அறக்கட்டளை, தஞ்சாவூர் கிளை உடன் இணைந்து புரிந் துணர்வு ஒப்பந்தம் 30.04.2022 அன்று கையெழுத்திடப்பட்டது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்த மானது தஞ்சாவூரின் கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தினை பாதுகாத்திடவும் ; ஆராய்ச்சி மற்றும் கல்வியின் நோக்கில் நம் பாரம்பரியத்தினை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வ தற்காகவும்; அறிவுசார் நுணுக்கங் களை பகிர்ந்து கொள்ளவும்; மேலும் கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கான நூலகம் அமைத்திட வேண்டியும் ஒப்பந் தத்தில் மேற்கோள் இடப் பட்டுள் ளது. பல்கலைக்கழகத்தின் பதிவா ளர் முனைவர் பி.கே.சிறீவித்யா மற்றும் கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கான இந்திய தேசிய அறக்கட்டளை சார்பாக பாபாஜி ராஜா போன்ஸ்லே ஆகி யோர் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்நிகழ்வில் பல்கலைக்கழகத் தின் துணைவேந்தர் முனைவர் எஸ். வேலுசாமி அவர்களும், புல முதல்வர் முனைவர் சி.வி. சுப்பி ரமணியன், கட்டட எழில் கலை துறை தலைவர் என்.ரமேஷ்பாபு மற்றும் கலை மற்றும் கலாச்சார பாரம் பரியத்திற்கான இந்திய தேசிய அறக்கட்டளை, தஞ்சாவூர் கிளை சார்பாக உறுப்பினர்களும் பங்குபெற்றனர்.
No comments:
Post a Comment