புதுடில்லி, மே4- இந்தியாவில் வேலையின்மை விகிதம், மார்ச் மாதத்தை விட ஏப்ரல் மாதத்தில் அதிக ரித்துள்ளதாக இந்தியப் பொருளாதாரக் கண்கா ணிப்பு மய்யம் (CMIE) தெரிவித்துள்ளது. குறிப் பாக, நகர்ப்புற வேலையின்மை சுமார் 1 சதவிகி தம் அதிகரித்துள்ளது.
இந்தியாவில் வேலையின்மை விகிதம், மார்ச் மாதம் 7.60 சதவிகிதமாக இருந்த நிலையில், ஏப்ரல் மாதத்தில் 7.83 சத விகித மாக 23 புள்ளிகள் அதிக ரித்துள்ளது. நகர்ப்புறங் களில் மார்ச் மாதம் 8.28 சதவிகிதமாக இருந்த வேலையின்மை விகிதம் ஏப்ரல் மாதத்தில் 9.22 சதவிகிதமாக 96 புள்ளி கள் அதிகரித்துள்ளது. கிராமப்புறங்களில் 7.29 சதவிகித மாக இருந்த வேலையின்மை விகிதம் 7.18 சதவிகிதமாகக் குறைந் துள்ளது. இந்தியாவி லேயே அதிகபட்சமாக பாஜக ஆளும் அரியானா வில் வேலையின்மை விகி தம் 34.5 சதவிகிதமாகவும், காங்கிரஸ் ஆளும் ராஜஸ் தானில் 28.8 சதவிகிதமா கவும் உள்ளது. தமிழ்நாட் டில் மார்ச் மாதம் 4.1 சதவிகிதமாக இருந்த வேலையின்மை விகிதம் ஏப்ரலில் 3.2 சதவிகிதமா கக் குறைந்துள்ளது. விலை வாசி உயர்வால் உள் நாட்டுத் தேவை அல்லது நுகர்வு குறைந்துள்ளது. கரோனாவில் இருந்து மீண்டு வரும் பொருளா தாரத்தின் வேகமும் மிக மெதுவாக உள்ளது.
இவையே வேலையின்மை அதிகரிப்புக்கான காரணங்கள் என பொரு ளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment