பொதுத்துறையை சீரழிக்கும் ஒன்றிய அரசு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 4, 2022

பொதுத்துறையை சீரழிக்கும் ஒன்றிய அரசு!

புதுடில்லி, மே 4- எல்.அய்.சி. பங்கு விற்பனையால், அந் நிறுவனத்திற்கு 54 ஆயி ரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும் என முன்னாள் அய்.ஏ.எஸ். அதிகாரிகள், நீதிபதிகள் எச்சரித்துள்ளனர். 

எல்.அய்.சி.யின் 3 புள்ளி 5 சதவீத பங்குகள் விற்பனை செய்வதன் மூலம் 21 ஆயிரம் கோடி ரூபாய் வரை நிதி திரட்ட ஒன்றிய நிதி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இந் நிலையில், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் பொதுச் சேவைகளுக்கான மக்கள் ஆணையரகம் என்ற அமைப்பு வெளி யிட்டுள்ள அறிக்கையில், சர்ச்சைக்குரிய எல். அய். சி.  பங்கு விற்பனையை ஒன்றிய அரசு உடனே கைவிட வேண்டும் என வலியு றுத்தப்பட்டுள்ளது. எல்.அய்.சி. பங்கு விற்ப னையால், அந்நிறுவனத் திற்கு 54 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற் படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்.அய். சி-யின் தற்போ தைய சந்தை மதிப்பு 5 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ள தாகவும், 853 ரூபாய் மதிப்புள்ள ஒரு பங்கின் விலை, 632 ரூபாய் 50 காசு களாக நிர்ண யிக்கப்பட்டு உள்ளதாகவும் அந்த அறிக் கையில் குறிப் பிடப்பட்டு உள்ளது. பன்னாட்டு முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதற்காகவே, இந்நிறுவனத்தின் பங்கு களை ஒன்றிய அரசு குறைத்து மதிப்பிட்டுள்ள தாகவும் அந்த அறிக்கை யில் குற்றம் சாட்டப்பட் டுள்ளது. 

இந்த அறிக்கையில், கேரள முன்னாள் நிதி அமைச்சர் தாமஸ் அய் சக், முன்னாள் திட்டக் குழு உறுப்பினர் எஸ்.பி. சுக்லா, ஒன்றிய அரசின் பொருளாதார விவகாரங் களுக்கான முன்னாள் செயலாளர் இ.ஏ.எஸ்.சர்மா மற்றும் முன்னாள் நீதிபதிகள், கல்வியாளர் கள் உள்ளிட்ட பலர்  கையெ ழுத்திட்டுள்ளனர்.

No comments:

Post a Comment