மனிதனை மனிதன் சுமப்பதா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 7, 2022

மனிதனை மனிதன் சுமப்பதா?

முதுபெரும் மேனாள் அமைச்சர் (வயது 97) 
வி.வே.சுவாமிநாதன் கடிதம்

பொருள்: 4.5.2022 - தமிழ்நாடு சட்டப் பேரவையில் அறநிலையத் துறை மானியம் மீதான விவாதத்தின்போது தமிழ் மடாதி பதிகள் மனிதன் சுமக்கும் பல்லக்கில் பவனி வருவதை அரசு தடை செய்ய வேண்டுமா என்ற பிரச்சினைக்கு அற நிலையத்துறை அமைச்சர் "மாண்புமிகு முதலமைச்சர் நடுநிலை தவறாமல் சமூகமாக பரிகாரம் தருவார்" என பதில் அளித்தது பற்றி...

பார்வை: இதே பிரச்சினைதான். பார்ப்பன காஞ்சி காமகோடி பரமாச்சாரியார் மனிதர்கள் சுமக்கும் பல்லக்கில் பவனி வந்ததை பார்த்த துடிப்புள்ள இளைஞன் ஒருவன் மடாதி பதியைப் பார்த்து "பல்லக்கை தோளில் சுமக்கும் மனிதர்களுக்கு வலிக்காதா?" என கேட்க, பெரிய சங்கராச்சாரியார் பல்லக்கை விட்டு இறங்கி நடக்கிற காட்சி இயக்குநர் பாரதிராஜா தயாரித்த  'வேதம் புதிது' என்ற திரைப்படக் காட்சியாகும். இதனை தணிக்கைக் குழு  (Censor Board) துண்டித் ததை ரத்து செய்யுமாறு பாரதிராஜா என்னிடம் கேட்டார். நான் அன்றைய முதலமைச்சர் (1987) எம்.ஜி.ஆர். அனுமதியுடன், இந்தப் பிரச்சினையை அணுகினேன். அதனால் ஒன்றிய அரசில்  ராஜீவ் காந்தி பிரதமராய்,  பார்ப்பன வகுப்பைச் சேர்ந்த நரசிம்மராவ் தொழில்துறை  அமைச்சராக இருந்தபோதே தணிக்கை குழு  அக்காட்சியை துண்டித்தது தவறு என்ற விடை கிடைத்தது. ஒன்றிய அமைச்சர் நரசிம்மராவ் தான்  மேல் முறை யீட்டைக் கேட்க வேண்டியவர். நான் எம்.ஜி.ஆர். அரசில் அறநிலையத்துறை மற்றும் திரைப்படத் துறை அமைச்சராக இருந்ததால் தணிக்கைக் குழு துண்டித்த பகுதியை ஒன்றைக் கூட மாற்றாமல் அப் படியே இணைக்க அனுமதி வாங்கித் தந்த சம்பவத்தை நினைவுபடுத்து கிறேன்.

சட்டப் பேரவை யில் தற்போது நடப்பது பெரியார், அண்ணா, கலைஞர் 'திராவிட மாடல்' ஆட்சிதான் என்று அழுத்தம் திருத்தமாக விவாதத்தில் பதில் சொன்ன முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடப்பது மதச்சார்பற்ற அரசாட்சி! மனிதன் மனிதனை   சுமப்பது - அதுவும் சாமான்யர் களுக்கு ஜாதி பேதம், பொருளாதார ஏற்றத் தாழ்வு இல்லாத சமத்துவத்தைப் பாடம் புகட்ட வேண்டிய போதகராகிய  பார்ப்பனரல்லாத தமிழ் மடாதிபதிகள் - சங்க காலத்திலிருந்து 'எல்லோரும் ஓர் குலம் ஓரினம்' எனும் தமிழர் நாகரிகத்தை, பண்பாட்டை வலியுறுத்தக் கடமைப்பட்டவர்கள். நவீன மூடியுடனும், மூடி இல்லாததுமான அழ கழகான கார்கள் இருக்கும்போது பல்லக்கில் மனிதர்கள் சுமக்க பட்டணப்பிரவேசம் வரு வதை கைவிடுவதில் தயக்கம் காட்டாமல் ஊருடன் ஒத்து சட்டப்படி நடக்க முன் வர வேண்டும் என்று உறுதியாகச்  சொல்லாமல் தீர்ப்பை 'சஸ்பென்சாக' வைப்பது தேவையில்லை. 

காஞ்சி பெரிய சங்கராச்சாரியார் போல வேடம் தரித்த மடாதிபதி மனிதர்கள் சுமக்கும் பல்லக்கில் பட்டணப் பிரவேசம் போனதைக் கண்டித்த காட்சி காட்டப்பட வேண்டியதுதான் என 1987இல் அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் பாரத ரத்னா முதலமைச்சராகவும், இந்தி யாவின் பிரதமராக ராஜீவ்காந்தியும் இருந்த போது தீர்ப்பளித்த அன்றைய ஒன்றிய   அமைச்சர் பார்ப்பனர் நரசிம்மராவ் அவர் களின் தீர்ப்பையும் நல்ல முன் உதாரணமாக தமிழ்நாடு முதலமைச்சருக்கு தெரியப்படுத் துகிறேன்.

- வி.வே. சுவாமிநாதன்


No comments:

Post a Comment