உயிர் காக்கும் மருத்துவச் சாதனங்கள் தேவை அதிகரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 2, 2022

உயிர் காக்கும் மருத்துவச் சாதனங்கள் தேவை அதிகரிப்பு

சென்னை, மே 2 பன்னாட்டு அளவிலான கரோனா பெருந்தொற்று இடையேயும் மைக்ரோடெக் உடல்நலப் பராமரிப்பு, சூரிய சக்தி போன்ற புதுய துறைகளில் இறங்கி, இந்தியாவில் அதன் காலடிகளை விரிவுபடுத்தியதுடன், 20க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதியாளராகவும் தன் வீச்சை விரிவுபடுத்தி இருக்கிறது. 

ரத்த அழுத்த மானிட்டர்கள், நெபுலைஸர்கள், வெப்பமானிகள் உள்ளிட்ட தயாரிப்புகளை உற்பத்தி செய்வதன் மூலம், இந்த நிறுவனம் விரைவாக வளர்ந்து வரும் உடல்நலப் பராமரிப்பு சந்தைக்குள் நுழைந்திருக்கிறது. ஆக்ஸிஜன் செறிவூட்டிகளுக்கு அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்ய, ‘இந்தியாவில் தயாரிக்கப்பட்ட’ ஆக்ஸிஜன் செறிவூட்டிகளையும் அது கடந்த ஆண்டு துவக்கி இருக்கிறது. 

உலகம் புதுப்பிக்கப்படக் கூடிய சக்தியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும்போது, சூரிய சக்தித் தீர்வுகள் சந்தையில் பெரும் வாய்ப்புகள் இருப்பதாக மைக்ரோடெக் நிறுவனம் கருதுகிறது. இந்தியாவில் அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வரும் சூரிய சக்தி பிராண்டுகளில் ஒன்று என்ற சிறப்பை இந்த நிறுவனம் பெற்றிருக்கிறது என இந்நிறுவன பன்னாட்டு தலைவர் சுபோத் மற்றும் துணை மேலாண் இயக்குநர் சவுரப் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment