தொண்ணூறை
தொடுகின்ற அகவை!
பன்னூறு ஆண்டுகள்
மக்கள் பணி!
தமிழர் வாழ்வு
தழைத்தோங்க
தந்தை பெரியார்
வழியில் போர்!
இனத்தின் மாண்பு காக்கும்
இடைவிடாத உழைப்பு!
வாழ்வியல் சிந்தனையை வடித்துத்தரும் பகுத்தறிவுப் பண்பு!
ஓய்வுக்கும் ஓய்வுதரும்
உன்னத இயக்கப்பணி!
காலநேரம் பாராது
கடமையாற்றும் கழகப்பணி!
இவர் ஆசிரியர்க்கெல்லாம்
ஆசிரியர்
அய்யாவின் வழியில்!
அடிபிறழாத கொள்கையில்!
தமிழரின் வாழ்வில்
சனாதன இருள் சூழ்ந்தபோதெல்லாம்
இவர் நம் துயர்துடைக்க வந்த
ஒளிவிளக்கு!
இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தின் மைல்கல்!
இடைவிடாத சோதனையிலும்
இயக்கம் வளர்த்த பேராண்மை!
இந்தியாவிற்கே வழிகாட்டும்
விழிப்புணர்வு கொள்கைகள்!
திராவிட சித்தாந்தத்தின் சிகரம்!
ஆசிரியர் அய்யா நீடு வாழ்க!
கவிமுகில் பெ.அறிவுடைநம்பி
தலைவர், பகுத்தறிவாளர் கழகம்
திண்டுக்கல்
No comments:
Post a Comment