கோவில் பெயரால் மோசடி வசூல் - இதுதான் பி.ஜே.பி. - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 30, 2022

கோவில் பெயரால் மோசடி வசூல் - இதுதான் பி.ஜே.பி.

தமிழ்நாடு பி.ஜே.பி. தலைவர் அண்ணாமலையின் நெருங்கிய கூட்டாளி கார்த்திக் கோபிநாத்

கோவில் பெயரால் பல லட்சம் ரூபாய் மோசடி வசூல்  - கைது!


உள்துறை அமைச்சர் அமித்ஷா - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்பட  பல முக்கிய பிரமுகர்களிடம் கார்த்திக் கோபிநாத்தை அறிமுகம் செய்தவர் தமிழ்நாடு பி.ஜே.பி. தலைவர் அண்ணாமலை

சென்னை, மே 30 பாஜக ஆதர வாளரும், இணையதளங்களில் கோவில் கட்ட நிதி தாருங்கள் என்று பரப்புரை செய்த  கார்த் திக் கோபிநாத் ஆவடி மத்திய குற்றப்பிரிவு காவல்துறையின ரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாமி சிலை உடைப்பு

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. அப்பகுதியில் உள்ள பலருக்கு இக்கோவில் குலதெய்வம் என்பதால் அரசு இதனை எடுத்து புனரமைப்பு செய்து வசதிகள் செய்து கொடுத்திருந்தது. இந்த நிலை யில் இதன் அருகில் உள்ள ஒரு பிரபல கோவிலில் அர்ச்சகராக இருக்கும் நபரின் உறவினர் நாதன் அய்யர் இந்தக்கோவிலின் சிலைகளை உடைத்துள்ளார். 

இது தொடர்பாக ஊர் மக்கள் பிடித்துவிசாரித்த போது அருகருகே கோவில் இருப்பதால் தங்கள் கோவிலுக்கு வரும் மக்கள் குலதெய்வம் என்ற பெயரில் இந்தக்கோவிலுக்கு உண்டியல் பணம் மற்றும் நேர்த்திக்கடன்களைச் செலுத்தி விடுகின்றனர்.  இதனால் பொறாமை கொண்டு இந்தக் கோவிலுக்குள் நுழைந்து சிலை களைச் சேதப்படுத்தியது தெரிய வந்துள்ளது. 

இதனை அடுத்து சேதப்படுத் தியவரை எச்சரித்து அனுப்பி உள்ளனர். ஆனால் சில நாட் கள் கழித்து மீண்டும் அதே நபர் கோவிலைச் சேதப்படுத்திவிட் டார். இந்த நிலையில் ஹிந்து அமைப்பினர் இந்தக் கோவிலை மாற்றுமதத்தினர் அடித்து சேதப்படுத்திவிட்டதாக வதந்தி பரப்பினர். அவர்களை காவல் துறை எச்சரித்து அனுப்பினர். இந்த நிலையில்  இளைய பாரதம் யூடியூப் சேனல் நடத்தி கோவில் கட்டுகிறேன் என்ற பெயரில் பணம் வசூலித்து மோசடி செய்து வரும் கார்த்திக் கோபிநாத் என்பவர் இது குறித்து ஒரு வீடியோவை வெளியிட்டார். 

கிறித்தவர்கள்மீது பழி!

 அதில் கிறிஸ்தவர்கள் நமது ஹிந்துக்கோவிலை சேதப்படுத்தி விட்டனர். நமது மதத்தினை அழிக்க முற்படுகின்றனர். இவர் களுக்கு எதிராக நாம் போராட வேண்டும் முதலில் கோவிலைப் புனரமைக்கவேண்டும். இதற் கான நிதியைத் நாம் திரட்டு கிறோம். 

என்னுடைய வங்கி கணக் கிற்குப் பணம் அனுப்புங்கள் கோவிலைப்புனரமைத்து ஹிந்துமதத்தைக் காப்பாற்று வோம் என்று பதிவிட்டிருந்தார். இதன் மூலம் இதுவரை 20 லட்சம் நிதி திரட்டப்பட்டுள்ள தாகக் கடந்த ஆண்டு அக்டோ பர் மாதமே சுவராஜ் தமிழ் என்ற இணையதளம் வெளியிட்டிருந்தது. 

அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமன் உடனான சந்திப்பு

இந்த நிலையில் பண மோச டிக் குற்றவாளியான கார்த்திக் கோபிநாத்தை அழைத்துக் கொண்டு அமித்ஷா சென்னை வரும் போது தமிழ் நாடு பிஜேபி தலைவர் அண்ணா மலை விமான நிலையத்தில் விமா னத்தில் இருந்து இறங்கும் போதே சந்திக்கவைத்தார். அதேபோல் நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட டில்லியில் இருந்துவரும் பாஜக பிரபலங்களோடு இவர்களை அறிமுகப்படுத்திவைத்தார்.தமிழ்நாடு பிஜேபி தலைவர் அண்ணாமலை, கோபிநாத்தும் அவ்வாறு எடுத்தப் ஒளிப் படத்தை வைத்துக்கொண்டு விளம்பரம் செய்தார்; இவர் கோவில் வசூல் வேட்டையாடி பல லட்ச ரூபாய்களை வசூலித் துள்ளார். இவ்வாறு இவர் சேர்த்த தொகை ரூ.50 லட்சத் திற்கும் மேல் இருக்கும்

இந்நிலையில் சமூக ஆர்வலர் இவரது பண மோசடி குறித்து காவல்துறையில் புகார் அளித்தார். மேலும் இது தொடர்பாக அறநிலையத்துறை அமைச்சரி டம் சில நாட்களுக்கும் முன்பு ஊடகவியலாளர்கள் கோவில் கட்டுவோம் என்ற பெயரில் பலர் இணையதளங்கள் மூலமாக நிதி திரட்டி மக்களை ஏமாற்றி மோசடி செய்கிறார்களே என்று கேட்டனர். 

அதற்குப் பதில்கூறிய அமைச்சர், இது தொடர்பாக நாங்கள் விசாரணை நடத்திவரு கிறோம் என்று கூறி இருந்தார். இந்த நிலையில் பிஜேபி ஆதரவாளரும் யூ டியூபருமான கார்த்தி கோபிநாத்தை ஆவடி காவல்துறையினர்  பண மோசடி வழக்கில் கைது செய் துள்ளனர்.

No comments:

Post a Comment