வல்லம், மே 31- பெரியார் நூற்றாண்டு பாலிடெக் னிக் கல்லூரியின் மேனாள் மாணவர் சங்க ஆண்டு கூட்டம் 28.5.2022 அன்று காலை 10.30 மணி யளவில் இப்பாலிடெக் னிக் வளாகத்தில் நடை பெற்றது. மேனாள் மாணவர் சங்க ஆண்டுக் கூட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றிய இப்பாலிடெக்னிக்கின் முதல்வர் டாக்டர் இரா.மல்லிகா, முன்னாள் மாணவர்கள் சங்கம் என் பது ஒரு கல்லூரியின் வளர்ச்சிக்கும் பெருமைக் கும் மிக முக்கியமான ஒன்று கூறிய அவர் இப் பாலிடெக்னிக் கல்லூரியில பயிலும் மாணவர்கள் புதிய தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்ளவும், புகழ்பெற்ற தொழிற் சாலைகளில் வேலை வாய்ப்பு பெறவும், முன் னாள் மாணவர்களின் பங்கு உள்ளது என்று குறிப்பிட்டார்.
இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் மாணவர்கள் தங்களின் வளர்ச்சிக்கு காரணம் தாங்கள் இப் பாலிடெக்னிக் கல்லூரி யில் ஒழுக்கத்துடன் பெற்ற கல்வியே காரணம் என்று மகிழ்வுடன் கூறிய முன்னாள் மாணவர்கள் தங்கள் வளர்ச்சிக்கும், உயர்வுக்கும் இக்கல்லூரி யின் நிறுவனத் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்களுக்கு தங்கள் நன்றியை தெரிவித்தனர். மேலும் இக்கல்லூரியின் பாடத்திட்டம் மற்றும் ஆக்கப்பூர்வமான பணி களைப் பற்றிய ஆலோச னைகள் வழங்கப்பட்டன.
முன்னதாக இப்பாலி டெக்னிக் துணை முதல் வர் டாக்டர் அ.ஹேம லதா வரவேற்புரை வழங் கினார். இவ்விழாவில் கணித பேராசிரியர்
கே.நீலாவதி நன்றியுரை வழங்க கூட்டம் இனிதே நிறைவுற்றது.
No comments:
Post a Comment