- பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன்
அண்ணல் அம்பேத்கர் அகம்பூரிக்கவே
எண்ணச் சமத்துவம் இயற்றும் செயற்கோ!
பிறந்தநாள் அறிவரின் சிறந்தநாள் ஒளிபெற
துறந்தவர் போலவே தொண்டுசெய் முதல்வர்
நலிந்த நிலைவாழ் நரிக்குற வர்இல்
வலிமை பெருக்கிட எளிமை யர்முனே
இமயம் இறங்கி சமதளம் வந்தபோல்
அமர்ந்துண வுண்டதென்? கமழ்மணம் கண்டதே!
முதன்மை முதல்வர் மு.க.இஸ்டாலின்
இதயம்அம் பேத்கர் இலக்கிருப் பிடமே!
மக்களோடு மக்களாய் வாழும்
மக்கள் முதல்வர் வாழ்க! வெல்கவே!
No comments:
Post a Comment