இந்தூர்,மே 7- காய்கறி வியாபாரியின் மகள் நீதிபதியாகியுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் இந்தூரைச் சேர்ந்த அசோக் நாகர் காய்கறி வியாபாரியாக இருக்கிறார். இவரது மகள் அங்கிதா நாகருக்கு, சிறு வயதிலேயே நீதிபதியாக வேண்டும் என்ற ஆசை இருந்தது. இதையடுத்து, அவர் சட்டத்தில் பட்டப்படிப்பிலும், பட்ட மேற்படிப்பிலும் தேர்ச்சி பெற்றார். பின், நீதிபதிகளுக்கான தேர்வை மூன்று முறை எழுதி தோல்வியடைந்தார். எனினும் மனம் தளராத அங்கிதா, நான்காவது முறையாக தேர்வு எழுதி, அதில் தேர்ச்சி பெற்று நீதிபதியாகியுள்ளார். இது பற்றி அங்கிதா கூறுகையில், ''நீதிபதியாகும் என் கனவு பலித்துவிட்டது. நீதிமன்றத்தை நாடி வரும் சாதாரண மக்களுக்கு தீர்ப்பை உறுதி செய்வதே என் பணி,'' என்றார்.
No comments:
Post a Comment