சென்னை, மே 31 எண்ணூர் முகத்துவார ஆற்றில் எண் ணூரை சேர்ந்த தாழங் குப்பம், நெட்டுகுப்பம், காட்டுக்குப்பம், எண் ணூர் குப்பம் உள்ளிட்ட 8 மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் மீன், நண்டு, இறால் பிடித்து வாழ்கின்றனர். சுற்றுவட் டாரத்தில் உள்ள ஒன்றிய அரசு நிறுவனத்திலிருந்து ரசாயன கழிவுகள் இந்த முகத்துவார ஆற்றில் விடு வதால் ஆற்று நீர் மாசு ஏற்பட்டு மீனவர்களுக்கு பல்வேறு தோல் நோய் ஏற்படுகிறது. மேலும் வட சென்னை அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியேறும் சுடுதண் ணீர் மற்றும் சாம்பல் கழி வுகள் முகத்துவார ஆற் றில் விடப்படுகின்றன. சுடுநீரில் சோடியம் கலந் திருப்பதால் நண்டு, இறால், மீன்கள் அழிந்து விடுவ தாக கூறி மீனவர்கள் குற்றம்சாட்டுகின்ற னர்.
இதனால் ரசாயன கழிவுகளைஆற்றில் விடக்கூடாது என மீன வர்கள் போராட்டங் களை பல ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர். மீன் பிடித் தொழில் செய்ய முடியாத பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வட சென்னை அனல் மின் நிலையத்தில் வேலை வாய்ப்பு வழங்க வேண் டும் எனவும் மீனவர்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், தாழங் குப்பம், நெட்டுகுப்பம், காட்டுக்குப்பம், எண் ணூர் குப்பம் பகுதியை சேர்ந்த 100க்கும் மேற் பட்ட மீனவர்கள் நேற்று காலை முகத்துவார ஆற் றங்கரையில் ஒன்று கூடி னர்.
பின்னர் பைபர் படகு களில் முகத்துவாரம் பகு தியில் ஆற்றுக்குள் சென்று வடசென்னை அனல் மின் நிலையத்திலிருந்து சுடுநீர் வெளியேறும் பகு தியில் மணல் மூட்டை களை கொண்டு அடைத் தனர். தகவலறிந்த எண் ணூர் காவல்துறையினர் மற்றும் வடசென்னை அனல் மின் நிலைய அதிகாரிகள் விரைந்து வந்து மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி னர். அப்போது மீனவர் கள் `எங்கள் கோரிக் கையை நிறைவேற்றினால் தான் அடைப்பை எடுப் போம்’ என்று மறுத்து விட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட் டது. இதையடுத்து மீனவ கிராம நிர்வாகிகளிடம் வடசென்னை அனல் மின் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வரு கின்றனர்.
No comments:
Post a Comment