பட்டுக்கோட்டை மாவட்டத் தலைவர் இல்ல விழா: மணமக்களுக்கு பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் வாழ்த்து! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 31, 2022

பட்டுக்கோட்டை மாவட்டத் தலைவர் இல்ல விழா: மணமக்களுக்கு பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் வாழ்த்து!

பட்டுக்கோட்டை, மே 31-  29.05.2022 அன்று, பட்டு கோட்டை கழக மாவட்ட தலைவர் அத்திவெட்டி பெ.வீரையன்- மாலதி ஆகி யோரது மகள் மா.வீ. எழில்மதி-பா.இராம ராஜேஸ்வரன் ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சி, மதுக்கூர், படப்பைக் காடு வி.ஆர்.டி. காலை திருமண அரங்கத்தில் நடைபெற்றது. 

கழகப்  பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் தலைமையேற்று உரையாற்றினார். கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் முன்னிலையேற்று உரையாற்றினார். மாநில அமைப்பாளர் இரா.குண சேகரன், பெரியார் அறக்கட்டளை உறுப்பினர் அய்யாதுரை வாழ்த்துரை வழங்கினார். மாநில கிராமப் பிரச்சார குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன் அனை வரையும் வரவேற்று உரையாற்றினார்.

பட்டுக்கோட்டை மாவட்ட செயலாளர் வை.சிதம்பரம், மன்னார்குடி மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், தஞ்சை மாவட்ட தலை வர் சி.அமர்சிங், தஞ்சை மண்டல செயலாளர் க.குருசாமி, தஞ்சை மண்டல தலைவர் மு.அய்யனார், கழகப் பேச்சாளர் இராம.அன்பழகன், கம்யூனிஸ்ட் கட்சி பொறுப்பாளர் பக்கிரிசாமி, மதுக்கூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் இளங்கோ, காங்கிரஸ் கட்சி மாநில துணை தலைவர் ராஜா தம்பி ஆகியோர் வாழ்த்துரை வழங்கி னர். 

திருவாரூர் மண்டல செயலாளர் கிருஷ்ண மூர்த்தி, திருத்துறைப்பூண்டி முருகையன், நாகை மாவட்ட தலைவர் நெப்போலியன், மாநில ப.க. ஊடக பிரிவு தலைவர் மா.அழகிரிசாமி, மாநில ப.க.துணை தலைவர் கோபு.பழனிவேல், மாநில கலைத் துறை செயலாளர் ச.சித்தார்த்தன்,  பொதுக் குழு உறுப்பினர்கள் அரு.நல்லதம்பி, இரா.நீல கண்டன், குடந்தை மாவட்ட தலைவர் கு.நிம்மதி, செயலாளர் சு.துரைராசு, தஞ்சை மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, துணை செயலாளர் அ.உத்திராபதி, மன்னை மாவட்ட செயலாளர் கோ.கணேசன், பட்டுகோட்டை மாவட்ட துணை தலைவர் சின்னக்கண்ணு, மாநில வீதிநாடக கலைக்குழு அமைப்பாளர் பி.பெரியார்நேசன், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந் தூரபாண்டியன், தஞ்சை மண்டல இளைஞரணி செயலாளர் முனைவர் வே.இராஜவேல்,  மாவட்ட ப.க. தலைவர் ஆ.இரத்தினசபாபதி, செயலாளர் இரா,காமராஜ், அமைப்பாளர் மணிகச் சந்திரன், மாவட்ட வழக்குரைஞரணி அமைப் பாளர் அ.அண்ணாதுரை, மாவட்ட கழக அமைப்பாளர் சோம.நீலகண்டன், மாவட்ட துணை செயலாளர் அ.காளிதாசன், மாவட்ட இளைஞரணி தலைவர் அ.பாலசுப்பிர மணியன், மாவட்ட இளைஞரணி செயலாளர் கா.தென்னவன், அமைப்பாளர் கு.சமரன், ஒன்றிய தலைவர் கு.சிவாஜி, செயலாளர் ராஜ்குமார், பட்டுகோட்டை ஒன்றிய செய லாளர் ஏனாதி சி.ரெங்கசாமி, தஞ்சை மாவட்ட ப.க. செயலாளர் பாவலர்.பொன்னரசு, மாவட்ட தொழிலாளரணி அமைப்பாளர் முத்து.துரைராஜ். சேது ஒன்றிய செயலாளர் ஆசிரியர் ஜெகநாதன், மற்றும் ஏராளமான கழக தோழர்கள், உறவினர்கள், நண் பர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். 

விழாவிற்கு வருகைபுரிந்த அனை வருக்கும் தந்தை பெரியாரின் "பெண் ஏன் அடிமையானாள்?, சுயமரியாதை திருமணம் ஏன்?" ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment