சட்டப்பேரவையில் முதலமைச்சர் தகவல்
சென்னை, மே 4 நீட் விலக்கு மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று (4.5.2022) தெரிவித்தார்.
‘நீட் விலக்கு மசோதா’ ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று ஆளுநரின் செயலாளர் தெரிவித்ததாக முதலமைச்சர் கூறினார்.
குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்காக மசோதா அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகவும், ஒன்றிய உள்துறை அமைச்சகம் மூலம் மசோதா குடியரசுத் தலைவரிடம் வழங்கப்பட உள்ளது என்றும் அவர் கூறினாராம்.
அடுத்தகட்டமாக, ஒன்றிய அரசை வலியுறுத்தி குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்படும் என்றும் முதலமைச்சர் கூறினார்.
No comments:
Post a Comment