சென்னை, மே 7 தமிழ்நாடு ஆளுநராக மேனாள் காவல் துறை அதிகாரி ஆர்.என். ரவி பொறுப்பேற்றது முதல் அவரது பேச்சு களும், செயல்பாடுகளும் கண்ணியமிக்க ஆளுநர் பொறுப்பிற்கு களங்கம் விளை விக்கும் வகையில் அமைந்து வருகிறது.
தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட மன்ற உறுப்பினர்கள் தமிழ் நாட்டிற்கு மருத்துவக் கல்வி நுழைவுத் தேர்விலிருந்து (நீட்) விலக்கு வேண்டும் என்று ஏக மனதாக நிறைவேற்றிய தீர்மா னத்தை வரம்பு மீறி விமர்சித்து அதனை சட்டமன்றத்திற்கு திருப்பி அனுப்பினார் ஆளுநர் ரவி.
அதனை மீண்டும் சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றி அவருக்கே திருப்பி அனுப்பிய பிறகு வேறு வழியில்லாமல் குடியரசுத் தலை வருக்கு அதனை அனுப்பி வைத்துள்ளார்.
தமிழ்நாட்டு அரசு புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக இருக்கும் சூழலில் பல்கலைக் கழகங்களின் வேந்தர் என்ற கவுரவ பொறுப்பை முறை கேடாகப் பயன்படுத்தி ஊட்டி யில் துணைவேந்தர்கள் கூட்டத் தைக் கூட்டி அதில் ஆர்எஸ்எஸ் பின்புலம் உள்ள ஒருவரை துணை வேந்தர்களுக்கு பாடம் எடுக்க வைத்தார் தமிழ்நாடு ஆளுநர் ரவி.
அதேபோல் சென்னை ஆளுநர் மாளிகையில் உள்ள பள்ளிவாசலில் காலங்காலமாக தொழுகை நடைபெற்று வந்த நிலையில் கரோனாவிற்குப் பிறகு வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் திறந்து ஆளுநர் மாளிகையில் உள்ள ஏனைய வழிபாட்டுத் தலங்களில் மக்கள் வழிபட்டு வரும் நிலையில் அங்குள்ள பள்ளிவாசலில் மட்டும் தொழுகை நடத்தாமல் மூடி வைத்து தனது சிறுபான்மை இன வெறுப்பை வெளிப்படுத்தி வருகிறார் ஆளுநர் ரவி.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்களுக்கு எதிராக செயல்படும் தமிழ்நாடு ஆளுநர் ரவி சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பை குறித்து வெளியிட்டுள்ள கருத்துக்கள் கண்டனத்திற்கு உரியவை.
ஒரு ஜனநாயக நாட்டில் எந்த ஒரு அமைப்பும் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு வெளிப்படையாக செயல்பட வேண்டுமே தவிர மறைமுகமாக எந்த ஒரு சமூகத்திற்கு எதிராக செயல்படக் கூடாது, அதனடிப் படையில் சிறுபான்மையின ருக்கு எதிராக செயல்படும் ஆர்எஸ்எஸ் தேசத் தந்தை காந்தி அவர்களை கொன்று இந்திய நாட்டில் செயல்பட்டு வரும் பொழுது மற்ற அமைப்பு களுக்கு தடை விதிக்க கூறுவது ஏற்றுக்கொள்ள இயலாது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் என்ற அமைப்பு குறித்து ஆளுநர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் ஒரு மாநில ஆளுநர் என்ற அவரது கண்ணியத்தை சீர் குலைத்து அவர் ஒரு சாதாரண அரசியல்வாதி என்ற நிலைக்குத் தள்ளியுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட சட்ட முன் வடிவுகளுக்கு ஒப்புதல் அளிக் காமல் கிடப்பில் போட்டுள்ள ஆளுநர் ரவி மாநில சட்ட ஒழுங்கை பேணக்கூடிய தமிழ் நாடு அரசின் உரிமையில் இந்த உரையின் மூலம் மீண்டும் தலையிட்டு உள்ளார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் மனசாட்சியாக செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஆளுநர் ரவி
தனது பேச்சுக்களுக்கும் நட வடிக்கைகளுக்கும் மனம் திருந்தி மக்க ளிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி கேட்டுக் கொள் கிறது. இவ்வாறு மனித நேய மக்கள் கட்சித் தலைவர் பேராசி. எம்.எச்.ஜவாஹிருல்லா அறிக் கையில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment