சென்னை,மே6- தமிழ்நாடு அரசின் கலை, பண்பாடு, அறநிலையங்கள், சுற்றுலாத் துறைகள் சார்பில் ‘தமிழகத்தின் செல்வங்கள்’ என்ற கையேடு வெளியிடப்பட்டது. சுற்றுலாவில், ஆண்டுதோறும் மாமல்லபுரத்தில் நடத்தப்படும் இந்திய நாட்டியத் திருவிழா, ஜல்லிக்கட்டு, சர்வதேச பலூன்திருவிழா, நீர்ச்சறுக்கு விளையாட்டு, தமிழ்நாடு யானைகள், நீலகிரி மலை ரயில், கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை,வேளாங்கண்ணி, நாகூர், மலைக்கோட்டை, செட்டிநாடு இல்லங்கள், ஆரோவில் உள்ளிட்டவை படங்களுடன் விளக்கப்பட்டுள்ளன. அறநிலையத்துறை பகுதியில் அத்துறையின் பல்வேறு நிகழ்ச்சிகள், பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள கோயில்கள் படமாக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. கலை, பண்பாடு பகுதியில், சமீபத்தில் நடத்தப்பட்ட நம்ம ஊரு திருவிழா, தஞ்சாவூர் பொம்மைகள், திருபுவனம் சேலைகள், வீணை, பரதம், தெருக்கூத்து, தேவராட்டம், பொங்கல் விழா, ஜல்லிக்கட்டு, குலசை தசரா என பல்வேறு பாரம்பரிய கலைகள் வண்ண புகைப்படங்களுடன் இடம்பெற்றுள்ளன. அருங்காட்சியகங்கள் பகுதியில், பூமராங் கருவி, செப்பேடுகள், சரஸ்வதி மஹால் நூலகம்,வீரக்கற்கள், தஞ்சை அருங்காட்சியகம் உள்ளிட்ட கலைப்பொக்கிஷங்கள், அருங்காட்சியகங்கள் இடம் பெற்றுள்ளன. நிறைவாக தொல்லியல் துறைபகுதியில், தமிழர்களின் தொன்மையை விளக்கும் சடையார்கோவில், கீழடி, கொற்கை, ஆதிச்சநல்லூர், இரட்டை கோயில், கொடுமணல், தரங்கம்பாடி கோட்டை,வெம்பக்கோட்டை, தஞ்சாவூர்அரண்மனை, சிவகளை, உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. முழுமையாக வண்ணப் படங்களுடன், ஏராளமான தகவல்களுடன் வெளியிடப்பட்டுள்ள ‘தமிழகத்தின் செல்வங்கள்’ என்ற இந்த கையேடு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Friday, May 6, 2022
‘தமிழகத்தின் செல்வங்கள்’ கையேடு வெளியீடு
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment