முதிர்ச்சியான நிலையில் சவால்களைக்
கையாளுவதாக தோழமைக் கட்சிகள் கூறுகின்றன!
"தி இந்து" ஆங்கில நாளேடு புகழாரம்!
சென்னை, மே 7- தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் முதிர்ச் சியுடன் சவால்களை கையாண் டார் என்றும் பொறாமைப்பட முடியாத அளவிற்கு பணிகளை செயல்படுத்தி வருகிறார் என் றும் தி.மு.க. ஆட்சியில் கிராமப் புற வளர்ச்சி, நீர் மேலாண்மை புத்தெழுச்சி பெற்றுள்ளதாகவும் ‘தி இந்து’ ஆங்கில நாளேடு பாராட்டு தெரிவித்துள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தலைமையிலான தி.மு.க. அரசு பொறுப்பேற்று இன்று டன் (7.5.2022) ஓராண்டு நிறை வடைவதையொட்டி, ‘தி இந்து’ ஆங்கில நாளேடு சிறப்புக் கட் டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.
2021 மே 7-ஆம் தேதி அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றபோது, அவருக்கு முன் ஏராளமான சவால்கள் இருந்தன என்றும் அரசின் கஜானா காலியாக இருந்தது, தொற்று நோயைக் கையாள மருத்துவ உள்கட்டமைப்பு போதுமானதாக இல்லை என் றும் பா.ஜ.க. தலை மையிலான ஒன்றிய அரசை முற்றிலும் எதிர் அரசியல் பார்வையுடன் சமா ளிக்க வேண்டியிருந்தது என்றும் குறிப்பிட்டுள்ள ‘தி இந்து’ நாளேடு, இதுபோன்ற சாவல் களை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் திறமையுடன் கையாண் டார் என்றும் பாராட்டி யுள் ளது.
‘தி இந்து’ ஆங்கில நாளேட் டில் வெளியான கட்டுரையின் முக்கிய சாராம்சம் வருமாறு:-
கடந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது மு.க.ஸ்டாலின், நடந்துகொண்ட விதமும் அவர் அளித்த வாக்குறு திகளும் அவரை முதலமைச்சர் பதவியில் அமர்த்தியுள்ளன. 2021 மே 7-ஆம் தேதி அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றபோது, அவருக்கு முன் ஏராளமான சவால்கள் இருந்தன. அரசின் கஜானா காலியாக இருந்தது, தொற்று நோயைக் கையாள மருத்துவ உள்கட்டமைப்பு போதுமான தாக இல்லை. பா.ஜ.க. தலைமையிலான ஒன்றிய அரசை முற்றி லும் எதிர் அரசியல் பார்வையு டன் சமாளிக்க வேண்டியிருந் தது. ஆனால் இந்த சவால்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறமையுடன் கையாண்டார். பதவியேற்று ஓராண்டுக்குப் பின் பல்வேறு கட்சிகளும் அவரைப் பாராட்டுகின்றன. இணக்கமான முறையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செயல்படும் விதம், அரசு இயந்திரம் மற்றும் அதி காரிகளிடம் நேர்மறையான விளைவை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகளின் போராட்டம், நீட் தேர்வு, மாநிலத்தின் பிற உரிமைகள் என அனைத்து விவகாரங்களிலும் தி.மு.க. அரசு சமரசமற்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது என்றும், புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக வெளிப்படையாகக் களமிறங்கி யதுடன், மாநிலத்திற்காக சொந் தக் கல்விக் கொள்கை உருவாக் கப்படும் என அறிவித்தது போன்றவை பா.ஜ.க. அல்லாத அரசுகள் ஆளும் மாநிலங்களுக்கு முன் மாதிரியாகத் திகழ்கிறது என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன் கூறியிருக்கிறார். ஒரு பிரச்சினையை கவனத்துக்கு கொண்டுவந்தால் உடனடியாக அரசு தலையிட்டு தீர்வு காணும் என்ற நம்பிக்கையை மக்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏற்படுத்தியுள்ளார்.
சமூக ஊடகங்களில் முன் னிலைப்படுத்தப்படும் பிரச்சி னைகள் அரசின் கவனத்தைப் பெற்றுள்ளன என்றும் பலமுறை முதலமைச்சரே ஏழைகளுக்கும் தகுதியுடையவர்களுக்கும் உதவிக்கரம் நீட்டினார். தனது இருப்பை ஓராண்டில் மக்க ளுக்கு உணர வைத்த அரசு, தி.மு.க. அரசு என்றும் இதனை கடந்தமுறை ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான அ.தி.மு.க. அரசால் சாதிக்க முடியவில்லை என்றும் தி.மு.க. அரசும் அதன் தலைமையும் வழங்கிய சித்தாந்த நோக்கு நிலை மாநிலக் கொள் கைகளுக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது என்றும் சென் னைப் பல்கலைக்கழக அர சியல் மற்றும் பொது நிர்வாகத் துறைத் தலைவர் பேராசிரியர் ராமு மணிவண்ணன் கூறி பாராட்டி யுள்ளார்.
-இவ்வாறு ‘தி இந்து’ஆங்கில நாளேட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment