சட்டப்பேரவையில் முதலமைச்சர் பிரகடனம்
சென்னை, மே 5 மனிதனை மனிதன் சுமக்கும் தருமபுரம் ஆதீனம் தொடர்பான பல்லக்குப் பிரச்சினையில் நேற்று (4.5.2022) எதிர்க்கட்சிகள் எழுப்பிய கருத்துகளுக்குத் தக்க பதிலடி கொடுத்துள்ளார் முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள்.
விவரம் வருமாறு:
பேரவைத் தலைவர் அவர்களே!
இன்றைக்குத் திட்டமிட்டு ஒரு சிலர் ஏதோ திராவிட முன்னேற்றக் கழகம் ஆன்மிகத்திற்கு எதிராக இருப்பதைப்போல சித்தரிக்கின்ற காட்சி, நாடு முழுவதும் நடந்துகொண்டிருக்கிறது. அந்த அடிப்படையில், இங்கேயும் அதைப் போன்ற கருத்தினைப் பதிவு செய்ய வேண்டுமென்ற அடிப்படையில், அ.தி.மு.க.வைச் சேர்ந்த உறுப்பினர் விசுவநாதன் பேசிக் கொண்டிருக்கிறார். அதற்கெல்லாம் நாங்கள் அடிபணிந்து போய்விட மாட்டோம். நான் தெளிவாகச் சொல்கிறேன்.
இது தந்தை பெரியார் ஆட்சி, அறிஞர் அண்ணா உருவாக்கிய ஆட்சி, தலைவர் கலைஞர் வழி நடக்கின்ற ஆட்சி. ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால், 'திராவிட மாடல் ஆட்சி'.
இவ்வாறு முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment